பக்கம்:களத்துமேடு.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

களத்து மேடு

 வாயிலே போட்டு மென்னு துப்பிடுங்க. அதுக்காவத்தான் இதை எச்சரிக்கையாய்ச் செப்புறேனாக்கும்!...."

"அதெல்லாம் ஒன் ஆப்பனுக்குப் புரிஞ்ச கதைதான்! தைலி!"

"அதான் மெய்யான தாக்கலாச்சுங்களே! வந்து..."

"என்னம்மா தொக்குவைக்கிறே?"

"இந்த மாப்புள்ளைக் காரகளை எப்படி நீங்க கண்ணி கட்டிப் புடிச்சீங்க?"

"அதுவா?"

கேட்டுவிட்டு, ஒரு தக்கம் சிரித்தார். சிரித்து விட்டு, "அதெல்லாம் ஒனக்கு எதுக்கம்மா? அது பெருங்கதையாக்கும்! அல்லாம் நம்ம சாமியான சாமி பெருங்காரை முண்டரோட கிருபையாக்கும்!" என்று மையமாகப் பேசினார். எங்கோ 'பொடி' வைத்துப் பேசிய பேச்சை அவர் அப்படியே மறைக்கப் பார்த்தார். ஆனால், கொம்பு சுற்றிய சேலையை அப்படியே அந்தரத்தில் விட்டுவிட இயலுமா?... இதம் கணித்துத்தானே எடுக்கவேண்டும்!

'அப்பன்காரக ஆளான ஆளு....... ஆவுடையார் கோயில் ஆளாச்சே! இவுக திட்டம் என் மூளைக்கு வருமா? ...ம் .. பாவம், பசிக்கிறக்கம் அப்பா ருக்கு!...விட்டுபுடிப்போம்!...... விடியட்டும்!...'

தைலம்மை நகை பூத்தாள்... "வாங்கப்பா, சோறு உண்ணுறதுக்கு," என்று அழைத்தாள்.

"அதுசரியம்மா! மாப்பிள்ளை சங்கதி என்னாச்சம்மா?" மறுகித் திரியும் காளையும் இந்த மனமும் ஒரே ஜாதிதான்!

'மாப்புள்ளைப் பேச்சுத் தானே? ... ஒங்களுக்கே புடிச்சுதின்னா எனக்கு மாத்திரம் புடிக்காதாங் காட்டி?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:களத்துமேடு.pdf/19&oldid=1386129" இலிருந்து மீள்விக்கப்பட்டது