பக்கம்:களத்துமேடு.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

களத்து மேடு 19 அப்பொழுது, வாசலுக்குத் திரும்பினாள் தைலம்மை, நெற்றியில் விபூதி விளங்கிற்று, நல்ல களையுடன் திகழ்ந் தாள், காதற் கனவின் கனியான இன்பத் தவிப்பை உள்ளடக்க மாட்டாமல், எம்பி எம்பித் தணிந்த வாளிப்பு மிக்க நெஞ்சை அழுத்தியவளாக நின்றாள். பாலுணர்வின் மோகக் கிறக்கம் சூடேறி விளையாடியது. நல்லதற்கும் தீயதற்கும் தெய்வமே துணை. ஆகவே, தெய்வத்தை நாடினாள். அவள் சமன் நிலை எய்தினாள். ஆண்டே!?? ஏறிட்டு விழித்தாள். சேரிச்சாம்பான் மரியாதையுடன் வாசலை மிதிக்காமல் மரநிழலில் மனித உருவமாக நின்றான். 'வாப்பா, சும்மா இங்கிட்டாலே வா!’ என்று முகமன் மொழிந்தாள் தைலம்மை, வணங்கிய குரலிலே! நன்றியின் ஈரப்பெருக்குடன் கிழவன் வந்தான். அதற்குள் சேர்வை வந்துவிடவே சாம்பான் தார்க்குச் சிக்கு ஆளான மாடாக பின்னோக்கி நடந்தான்.

"என்னடா!"

சாமிக்கு தண்டனுங்க 1. ஆண்டே வரச் சொன்ன தாய் எங்க மச்சாவி மவன் காதிலே போட்டுச்சு. அதான் பரிஞ்சாந்தேன்!--." "வார நெல்லு கொண்டாந்திருக்கிறே யில்லே ! வெள்ளாமை விளைச்சல் முடிஞ்சு எம்மாம் கால மாச்சு?...??

  • ஆண்டேக்கு ஒரு தாக்கலுங்க. ஒங்க தம்பிக்கிட்டவும் ரொம்ப வேண்டிக்கிட்டேன்...அவுகளும் பெரியமனசு பண்ணி சம்மதிச்சாங்க. அவுகளுக்குக்கொடுக்கிறதாட்டம் மேலைக்கு அல்லாத்தையும் கூட்டி ஒண்ணடி மண்ணடியாய் ஒங்க காலடியிலே குமிச்சுப் போடுறேனுங்க. மனுசங்கதான் ஏய்ச்சுப் பழகினவுங்கன்னு நெனைச்சிருந்தோம். இப்ப
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:களத்துமேடு.pdf/26&oldid=1386187" இலிருந்து மீள்விக்கப்பட்டது