பக்கம்:களத்துமேடு.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20 களத்து மேடு வரவர வானமும் அப்படி ஆகிப் புடுச்சுங்களே!. ஒரே மரத்திலே ஒரு கிளை நனைஞ்சும் ஒரு கிளை காஞ்சும் கிடக்கிற கூத்து இப்பத்தானுங்களே நடக்குது? ஏழை பாழைங்களுக்குக் கொஞ்சம் ஈவிரக்கம் காட்டுங்க! இந்த வார நெல்லு ரெண்டு கலத்தை வச்சுத்தானா நீங்க உண்ணப் போறீங்க?..." வேதனை பேசியது. மூச்சு முட்டியது. செக்குச் சத்தம் துளைத்தது. ஏலே....நிறுத்துடா அதோடே! எங்க அண்ணன் தம்பிக்குள்ளாற புகுந்து விளையாடிப்புட்டு, வாரநெல்லை ஏப்பமிட்டுப் புடலாம்னு நெனைப்பாடா நாயே? உன் வாலாட்டம் இங்கிட்டு செல்லாது!... அது ஒனக்கே புரியும். நீ எங்கிட்ட வந்து ஒப்பாரி வைக்காதே! ஒன்னை இப்பிடிப் படைச்சானே அவன்கிட்ட போயி அழு நாய்க்கு வாலை அளந்து வச்சிருக்கானே, சும்மாவாடா பின்னே ? போடா, போயி, வார நெல்லை ஏத்தியாந்து போடு!.. இல்லாங் காட்டி, நாளைக்கு உன் குச்சு ஆலாப் பறந்துப்புடும்!...” சொற்களில் சோளம் பொறிந்தது. ஆனால், அந்த ஏழையின் கண்ணிரிலே எரிமலை கனன்றதே. பாவம்! போவத்தைக் கணிக்க, புண்ணியத்தைப் பரிசீலிக்க இந்த மனித ஜடங்களுக்கு ஞானம் ஏது?’ என்று கேட்கத் தான் வானம் திடுதிப் பென்று முழங்கிச் சாடுகிறதோ?. தைலம்மையின் காந்தக் கண்கள் குளமாயின. அந்தக் குளத்தினின்றும் தரைக்கு வீசி எறியப்பட்ட மீன் ஆனது அவளது மனம், மெல்ல, தந்தையை நெருங்கினாள். "அதைப் பாருக்கில்ல!’ என்று நயந்துரைத்தாள். "இந்தாப்பாரு தைலி! ஒன் சோலியை குதாவிடை இல்லாமப் பார்த்துக்க. இது மாதிரி சங்கதிகளுக்கு வக்கணை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:களத்துமேடு.pdf/27&oldid=1386196" இலிருந்து மீள்விக்கப்பட்டது