பக்கம்:களத்துமேடு.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

களத்து மேடு 33 தைலம்மையைத் தேடிக்கொண்டு வந்த அவளது சிற்றப்பன் மகள் பூங்காவனம் உள்ளே நுழைந்ததும். சரவ ண னை ஒருமுறை முறைத்துப்பார்த்து விட்டு ஏனோ சொல்லாமல் கொள்ளாமல் பேயறைப்பட்டவளாக ஒடிவிட் டாள் : வாசற்புறம் வந்த சேர்வை, வீடு தேடி வந்திருந்த விருந்தாளியைக்கண்டு குதூகலம் அடைந்தார். 'வாங்கங்கி றேன்! ?’ என்று வாய் நிறையச் சொன்னார். மகள் தூண் மறைவில் நிற்பதைக் கண்டார். ஆத்தா, இவுகதான் மாப் புள்ளே! என்று சன்னக்குரலெடுத்துச் சொல்லிவிட்டு, "சுடுதண்ணிவை பொசுக்கினு ’ என்று பெருங் குரலில் பேசினார், அவள் நாணத்தின் பூவையாக உள்ளே மறுகினாள். 'மாப்புள்ளையை அப்பன்காரக எனக்கு இன்னாரின்னு சொல்லிப் புட்டாங்க! ஆனா, அது க்கு முந்தி, அந்த ஆம் பிளைக்கு என்னை இன்னாரின்னு சொல்லி வைக்கலையே? ...ம்...அந்த மாப்புள்ளைக்கா என்னை இனம்புரியாது? ம்!’’ தைலி சிரித்தாள். அவளை அழைத்தது புழக்கடை!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:களத்துமேடு.pdf/30&oldid=1386215" இலிருந்து மீள்விக்கப்பட்டது