பக்கம்:களத்துமேடு.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

களத்து மேடு

81

 அப்பிடிப் போனாலும், சீதேவி அவுகளோட போயிடுவான்னு தீ கொளுத்த ஒப்புக்கிடவும் மசியாங்க!" என்றான் இளவட்டம்.

நிழல்கள் இரண்டும் ஒன்றை ஒன்று தொடர்ந்தன. ஒன்றுக்கு ஒன்று வழிகாட்டியாகவும் அமைந்தன.

கெக்கடி, மடக்குளம், உள்வாய், செல்லையா சாயாக் கடை கடந்து கிளை வெட்டிப் பிரிந்து ஆவணத்தாங் கோட்டைச்சாலை முனங்கை இலக்கு வைத்துச் செல்லும் வரை ஏனோ சரவணன் வாயைத் திறக்கவில்லை. அறந்தாங்கிச் சந்தைவண்டி ஊர்ந்தது.

சேர்வைக்கோ உள்ளுற வயிற்றில் புளியைக் கரைத்தது. ஆனால் அவரோ ஆயிரம் ஆளுக்குத் தண்ணீர்ப் போக்கு காட்டும் சூராதி சூரர்... வில்லாதி வில்லன்!...

".... வந்து .... "

"சொல்லுங்களேன்!... "

சேர்வை ஆவாரம்பத்தைக் காட்டைவிட்டு மடங்கிய உருவத்தைக் கண்டதும், தம் தலையை, வேறுபக்கம் சிலுப்பிக் கொண்டார். வந்த உருவம், அவருடன் ஒரே ரத்தத்தில் கர்ப்பவாசத் துணை இருந்தது!.... 'ம்! வரட்டும்! ஒரு கை இவனுகளை அல்லாம் பாத்துக்கிடுறேன்!"

மறு பயணமும் இளசு சரவணன் இதழ் விலக்கினான்.

அது தருணம், கிழவி ஒருத்தி பயம் தெளித்து, பதட்டம் கண்டு, விழி கலங்கி ஓடிவந்து, சேர்வையை மறித்துக் குறுக்கிட்டு "செல்லாயிக்கு நெஞ்சடைப்பு வந்திருச்சுதுங்க!..." என்றாள்.

அவ்வளவுதான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:களத்துமேடு.pdf/38&oldid=1386340" இலிருந்து மீள்விக்கப்பட்டது