பக்கம்:களத்துமேடு.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42

களத்து மேடு


"வந்து.."

"ம்!..."

"அப்பாரு இப்பைக்கு வந்து சேர மாட்டாகளாக்கும்?..."

"ஆமா!"

"அப்படின்னா, வாங்க சாப்பிடலாம்! ..."

மொட்டினுள் ஊடாடும் உயிர் மணமாகப் பொலிந்தாள் பொற்பாவை.

"ஊஹூம்...ஆத்தாடி!...”

அவனையும் அறியாமல், அவள் நின்ற பக்கம் திரும்பி, கொஞ்சம் பலக்கவே வார்த்தைகளைக் கோத்து விட்டான் அவன். பற்களின் இடுக்கில் நமட்டுச் சிரிப்பு நசுங்கியது.

அவளும் யதார்த்தமாகவே சிரித்து வைத்தாள் "ஏதுங்க...என்ன கண்டு பயப்படுறீங்களாங் காட்டி?" இதயம் உணர்ந்த பெருமிதத்தில் அவ்வார்த்தைகள் மிதந்தன.

"ஊக்கூம்..ஊரைக் கண்டு பயப்படுறேன்! ..." வெகு, நிதானமான இங்கிதத்துடன் உணர்ந்து பதில் வெட்டினான் அவன்.

அவள் சேலை முகதலைவை வாய்க்குள் அழுத்திக் கொண்டாள் கச்சை முடிச்சுகள் இறுகித் தளர்ந்தன 'நம்ம ரெண்டு பேர் பொசிப்பும் ஆத்தாளோட சம்மதமும் போழையும் முடியுமாப் பொருத்தி யிருக்கிறப்ப, ஊருக்காக நாம எதுக்கு அச்சப்பட வேணும்...' என்று வாதாடத்தான் கருதினாள் அவள். ஆனால், சிலட்டூர் மச்சான் தன் தந்தை சம்பந்தப்பட்ட ஏதோ ஒரு நடப்பைச் சொல்லத் தயங்குவதை வைத்தும், இப்போது சாப்பிட ஒப்பாத பான்மையை ஆதாரமாக அமைத்தும், மேற்கண்ட கருத்தை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:களத்துமேடு.pdf/49&oldid=1386381" இலிருந்து மீள்விக்கப்பட்டது