பக்கம்:களத்துமேடு.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44

களத்து மேடு


அவனுடைய ரேக்ளா வண்டிக் காளை கத்திற்று. அவன் எழுந்தான்.

அதற்குள், அன்னப்பெடையாய் மாறி, முன்னேறி, வைக்கோல் பிசிறுகளைக் கொத்தாக அள்ளிக் காளையின் முன்னே தூவினாள். பிறகு நிலைப்படியில் வந்து நிலைத்தாள்.

சரவணன் மீண்டும் கனைத்துக் கொண்டான். பேச ஆரம்பித்தான். “ஒரு உருப்படியான சங்கதியை இப்பைக்கு உங்கிட்ட சொல்லியாக வேண்டிய கட்டத்தில் நான் இருக்கேன்... அதை மறைக்கிறத்துக்குத்தான் உங்க அப்பன்காரக எம்பிட்டோ பாடுபட்டாரு ஆனா, சாமிக்கே அது சம்மதமில்லே! உண்மையின்று நாம செப்புறோமே, அது வேதானே சாமியிங்கிறதும்! உங்கப்பாரு ரொம்பக் காலமாய் யாரோ அசலிலே ஒரு பொம்பளையோடே கள்ளத்தனமாகத் தொடுப்பு – சிநேகிதம் – வச்சிருக்கிறாராம்! இந்த இடுசாமத் தாக்கல் எங்க பெரிய வூட்டுக்கு எட்டி, அவுக இப்ப எம்மூஞ்சியைப் பார்க்கிறாங்க!... உனக்குத் தெரிஞ்சிருக்க வேணும். எங்க குடும்பம் அக்கம் பக்கம் பதினாலு நாட்டிலவும் தலைமுறை தத்துவமாய் ஒசந்து கெடியுள்ள குடும்பம்! ஆனதாலே, உங்கப்பன்காரக இப்பிடி தடம் மாறி நடக்கிறதாலே, இதை வசமான ஆதாரமாக்கிக்கிட்டு, இப்படி கெட்டப் போக்குக் கொண்டவுக வூட்டிலே கொள்வினை – கொடுப்பினை வச்சுக்கிட்டதாக நாளைப் பின்னைக்கு எங்களை அண்டை அசலிலே ஆம்பளையோ – பொம்பளையோ – பொடிசோ – பல்லுமேலே பல்லுப்போட்டு ஏசிப் பேசுவாங்க... அதுக்கு வகை வைக்கப் புடாது!... அதான் ரெண்டிலே ஒண்னு சேர்வைகாரக்கிட்ட கேட்டுத் தெரிஞ்சுகிட்டுப் போயிடனும்னுதான், சேதி விழுந்த சுவட்டிலேயே விழுந்தடிச்சுக்கிட்டு முண்டிவந்தேன்!..... ஆனா, அவரோ எங்கேயோ பதறிப்போய் பறிஞ்சிட்டாரு! வந்து இன்னொரு சமாசாரத்தையும் நீ முடிஞ்சுவச்சிக்கனும்! இம்மாதிரி துப்பு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:களத்துமேடு.pdf/51&oldid=1385979" இலிருந்து மீள்விக்கப்பட்டது