பக்கம்:களத்துமேடு.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

களத்து மேடு

45

களை நான் உங்காதுக்கு விழுக்காட்டினதாய் நீ கண்டுக் கிடப்புடாது!... ஆமா’...” என்று எல்லாவற்றையும் ஒரே மூச்சில் கொட்டிவிட்டான் சரவணன்.

ஆனால், பாவம், அந்தக்கன்னி தைலம்மையோ நட்டு வாக்களி கொட்டினமாதிரி துடிதுடித்துப் போய்விட்டாள் !

அவளை அவன் ஏறெடுத்துப்பார்த்த போழ்தில், அவளது நெற்றிமேட்டிலும் கன்னச் சதுக்கங்களிலும் பச்சை நரம்புகள் வேரோடி இருந்தை அவன் காணத் தவறவில்லை. அவளது விழி விளிம்புகள் முத்துச் சரக் தொடுத்துத் திகழ்ந்த விந்தை மிகுந்த வேதனைக் காட்சியையும் அவன் காணாமல் தப்பவில்லை.

சரவணனுக்கு மனத்தை என்னவோ செய்தது. மூண்டிருந்த பசி முரண்டியது. “சரி; நானு போயிட்டு வாரேன்!” என்று எழுந்தான்.

அவள் இம்முடிவை அவ்வளவு தீர்மானமாக எதிர் பார்த்தாள் இல்லையே!

“குந்துங்க. சாப்பிட்டுப் போயிடலாம்.”

கெஞ்சியபடி வேண்டினாள்.

“பொறகு ஆகட்டும் !...”

அழுத்தமாகக் குரல் கொடுத்தான்.

“அப்பிடில்லைங்க ...... வந்தவுங்க இத்தியாச்சும் கை நனைச்சிட்டுப் போங்க !.... அதான் நல்ல சகுனம் மாதிரி!” தயவுடன் மன்றாடினாள்.

“அல்லாம் மறுதப்படி ஆகட்டும். இப்ப ரொம்ப லெச்சை கொட்டுப்போச்சுது!” மீண்டும் அழுத்தந் திருத்தமாய்ப் பதிலிறுத்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:களத்துமேடு.pdf/52&oldid=1386028" இலிருந்து மீள்விக்கப்பட்டது