பக்கம்:களத்துமேடு.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46

களத்து மேடு


தைலம்மை மேனி சிலிர்த்தாள். கண் பொடித்தாள்.

மேகங்கள் இரைச்சல் போட்டன. இந்திரன் வானத்தில் வில் அமைத்தான்.

சரவணன் புறப்பட்டு விட்டான்; அவள் மோகினிச் சிலையானாள்.

ரேக்ளாவின் சக்கரங்கள் கன்னி ழியாப்பதுமையின் மனமோகனக் கனவுகளையா நடைபாதையாக்கி மிதித்துப் பறந்தன ?

சுடுசரங்கள் அவளைச் சுடாமல் மாலையாக நீண்டு கொண்டிருந்தன ! ...


காலம் எனும் புள்ளுக்குவிட்ட இடம் என்றும் இல்லை; தொட்ட இடம் என்றும் கிடையாது.

ஆனால், இது தன் பாட்டில் – தன் லயத்தில் – தன் சுருதியில்–படிப் பறந்து கொண்டேயிருக்கும்.

பண்ணைக்காரன் வந்து ஒட்டுத் திண்ணையில் ஒட்டி உட்கார்ந்தான். பூவரச இலை தைத்ததை தண்ணீர் தெளித்து உள்ளங்கையால் சமனப்படுத்திப் போட்டான்.

தைலம்மை வந்து வெஞ்சனம் வைத்தாள். அமர்க்களமான சமையல். விருந்தாடி மாப்பிள்ளைக்கென்று கருத்துடன் சமைத்ததல்லவா ? – உப்புக் கண்டங்களை வதக்கிச் சமைத்திருந்தாள். வெண்டிக்காய்த் தயிர்ப் பச்சடி. பாலுக்கும் தயிருக்கும் அங்கு முடை ஏது ? மாங்காயும் முருங்கக்காயும் குழம்பு.

நாக்கில் ஈரம் நனைய அவன் உண்ணலானான். ‘தென்னஞ்சீகுகளை’ வாகாய்ப் பொருத்திவிட்டுச் சாப்பிட்த் தாடங்கினான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:களத்துமேடு.pdf/53&oldid=1386031" இலிருந்து மீள்விக்கப்பட்டது