பக்கம்:களத்துமேடு.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54

களத்து மேடு


“மறுகா ஒரு கடுத்தம் ஆகட்டும், தைலி!”

“இப்ப என்ன வந்திடுச்சுங்க?”

“அம்மான்காரக இல்லையே?”

“நானு அம்மர்ன்மவ இருக்கிறேனுங்களே?”

அவன் பதில் ஏதும் சொல்லாமல், குறுஞ் சிரிப்பு உமிழ்ந்தான். அவன் மனம் எதையெதையோ எண்ணமிட்டது. ஒரு சமயம் – அவள் ஐந்து வயதிலே அறியாப் பருவத்திலே நடமாடிக் கொண்டிருக்கையில், தன் அம்மானும் தன் தாயாரும் உரையாடிக் கொண்டிருந்த வேளையில், “அக்கா, ஆத்தா மூத்தவளோட கிருபையாலே தான் எனக்குப் பொறந்த குஞ்சு பொண்ணாய் இருந்திருக்குது!... அதாலே, ஒங்க மகன் எனக்கின்னு அவதரிச்சிருக்கிற மாப்புள்ளை தானாக்கும்! எம்பேச்சு நெசம்! நீங்களும் அப்பாலே உங்க தம்பிமகள் அது இதின்னு பேச்சை மாத்தி, தடத்தையும் மாத்திப்புடப் புடாதுங்க...” என்று ஒரு முடிவை நிர்ணயம் செய்தார்களே? அதை எண்ணினானா அவன்?

ஆம்; அந்நிலையில் – அந்நடப்பைத் தான் அவன் எண்ணியிருக்க வேண்டும்.

ஆனால், இப்போதைய விதியின் விளையாட்டை அவன் எப்படி அறியக் கூடும்?–அக்கரைச் சீமைக்குச் சிறு பிராயத்திலேயே போய்ச் சேர்ந்த அவன், தன் பெற்றோரை அங்கேயே ‘காவு’ கொடுத்த பின்னர், அவனும் பர்மா நாட்டுக் “காப்பியா” ஒருவனால் நாடு மாற்றப்பட்டு விட்டதாக இங்கே சேதி வந்து, எல்லோரும் அலறித் துடிக்க, பிறகு மறுவருஷத்தில் தெய்வாதீனமாக அவன் உயிர் பிழைத்த செய்தியும் எட்டியது. அதற்குப்பிறகு இது நாள் பரியந்தம் அவனைப் பற்றி யாதொரு விவரமும் சேர்வைக்குக் கிட்டவில்லை!... அவன்வரை ஏதோ மர்மம் ஒன்று சூழ்ந்திருப்பதாகவே, ஊர்க்காரர்கள் கருதினார்கள் – அதன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:களத்துமேடு.pdf/61&oldid=1386067" இலிருந்து மீள்விக்கப்பட்டது