பக்கம்:களத்துமேடு.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56

களத்து மேடு

ரெண்டு பேருமே ஒரு கவளம் கூட உருட்டிப் போடலையே!..’

சிங்காரம் பிரிய மனமில்லாதவனாக – எதையோ இழந்து விட்ட மனநிலை கொண்டவனாக – அங்கிருந்து மெள்ள நழுவ முயன்றான்.

அப்போது:

“மச்சான்!” என்ற குரல் அனுப்பி, சீமைக்கிடாவைப் போன்ற திமிர் கொழிக்க அங்கு வந்து நின்றாள் பூங்கா வனம். சரிந்து விழுந்த சேலையைச் சீர் செய்தபடி, சிங்காரத்தின் குறுக்கே வந்து நின்றாள், விதி குறுக்கு மறித்து நின்ற பாங்காக!

சிங்காரம் ‘சேக்கை’ செம்மைப் படுத்திக் கொண்டான் ; நெற்றிவேர்வையைத் துடைத்துக் கொண்டான். நாசி முனையில் ரத்தம் கட்டியது. விழிகளின் மையத்தில் வியப்பு கொக்கி போட்டது. வந்த பெண்ணை வாயசைக் காமல் பார்த்தான்.

“மச்சான் ! என்ன அப்படி முளிச்சு முளிச்சுப் பார்க்கிறீங்க? நாம ரெண்டுபேரும் உங்க செலட்டூர் பூவரச மரத்தடிச்சாமி பொட்டலிலே கண்ணா மூச்சி கட்டி கட்டி வெளையாடுவமே, மறந்துப் பூட்டீங்களாக்கும் என்னமோ, சொந்தமும் பந்தமும் கண்ணுக்கு முன்னாலேதான் செல்லுபடி ஆகும்போல! என்ன அக்கா நானு சொல்லுறது?” என்று ‘வேதாந்தம்’ படித்து அதே திட்டத்தில் தைலம்மையையும் இழுத்துப் போட்டாள்.

ஆனால், தைலம்மையின் மனோ பாவத்தை, பாவம், இந்தக் கன்னிப் பெண் பூங்காவனம் எப்படி அறிவாள்!

பூங்காவனம் “அக்கா” முறை வைத்து விளித்த பான்மை சிங்காரத்தை தூண்டியது. ‘இது...ஆமா...எங்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:களத்துமேடு.pdf/63&oldid=1386072" இலிருந்து மீள்விக்கப்பட்டது