பக்கம்:களத்துமேடு.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

களத்து மேடு

59


இந்நிலையிலெ, தைலம்மைக்குத் தன் தகப்பன்மீது தான் கோபம் கோபமாக வந்தது. ‘உங்கப்பாரு ரொம்பக் காலமா யாரோ அசலிலே ஒரு பொம்பளையோடே கள்ளத்தனமாகத் தொடுப்பு – சிநேகிதம்–வச்சிருக்கிறாராம்!...’ என்று சரவணன் ‘கோடி காட்டி’ பேசி, விளைந்துள்ள இடு சாமத்திருப்பத்தை எடுத்து விளக்கியதை அவளால் நினைவுக் குழியில் வைத்து மீண்டும் ஒருதரம் ஆராய்ந்து பார்க்கக்கூட மனம் இடம் தரவில்லை. ஏதோ ஒரு விபரீதம் ‘வேடம்’ புனையக் காத்திருக்கிறது, என்ற அளவுக்கு அவளுடைய மனத்தின் மனம் சதா அச்சுறுத்திக் கொண்டிருந்தது. ‘ஆத்தாளே தாயே!... எங்க ரெண்டுபேரு மனசுகளையும் ஒண்ணிலேருந்து ஒண்ணை வெட்டி வெலக்கிப் புடாதே !... இது ஒனக்கு அடுக்கவே அடுக்காது!...’ என்று மனம் நொந்து பிரார்த்தித்தாள். ‘ஆமா, அப்பன்காரக வந்தடியும் எப்பிடியும் அந்தக் கமுக்கமான தவசலைப் பத்தி உடைச்சுப் பேசி, உண்டு இல்லைன்னு கேட்டுப்பட வேண்டியதுதான்!... இல்லாங்காட்டி, ஒண்னும் வசப்படாது!’ என்று ஒரு தீர்மானத்தையும் உருவாக்கிச் செம்மைப் படுத்திக் கொண்டாள். அப்படிப்பட்டதொரு முடிவுக்குத் தன் மனத்தையும் வலுப்படுத்திக் கொள்ளவும் அவள் தயாரானாள். நாளையப் பொழுது எப்படி விடிந்தாலும் சரி என்ற திட வைராக்கியமும் அவளை அண்டி அவளது ரத்தத்தோடு ரத்தமாக உறைந்து விட்டது.

உள்ளே அடுப்படியை நாடிச் சென்று மீண்ட தைலம்மையை எதிர்பார்த்துக் கொண்டு வாசலில் மகிழ்வின் திளைப்புடன் மெய்ம்மறந்து கனாக் கண்டு கொண்டு நின்ற பூங்காவனத்தின் தோளைத் தொட்டு, “என்னா தங்கச்சியோ!” என்று கேட்டாள்.

“அக்கா! அக்கா!... எனக்கு ஒரு பெரிய அதிர்ஷ்டம் வந்திருக்காக்கும்!...அதை உங்காதுக்கு விளுக்காட்டிட்டுப் போவத்தான் ஓட்டமா ஓடியாந்தேன்... நானு சிலட்டூரு மரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:களத்துமேடு.pdf/66&oldid=1386109" இலிருந்து மீள்விக்கப்பட்டது