பக்கம்:களத்துமேடு.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

களத்து மேடு

73

"பாட்டா! என்னைப் பெத்தவுகளுக்கு என்ன வந்திடுச்சாம்?... எப்படி ஆனாகளாம் இப்படி? இந்தக் களந்துமேட்டுக்கு எப்பிடி வந்தாங்க? இல்ல, யாருனாச்சும் கொண்டாந்து போட்டாங்களா?. உடம்பிலே கடுகத்தனை ரத்தம் தட்டு மறிச்சுக் கெடக்கக் காணோமே?... என்ன சூது இது?...இல்ல யாருனாச்சும் வேண்டாத படுபாவிக உயிர்த்துடிப்பிலே குறி வச்சுக் கணிச்சு ஒரே போடாப் போட்டு ஆளை சாச்சுப் புட்டாங்களா?... யாருறாச்சும் பில்லி வச்சுப்புட்டாங்களா? அப்பன்காரவுகளுக்கு வேண்டியவங்க கணக்கை விட வேண்டாதவுக கணக்குத்தானே ஒட்டிக்கு ரெட்டியாயிருக்கும் ஊர் நாட்டிலே!.... ஐயையோ! கன்னிப்பொண்ணு நானு இனிமே எப்பிடி நான் உசிர் தரிக்கப்போறேன்?..." என்று பச்சைப் பாலகியாகத் தேம்பினாள். மூக்கை உறிஞ்சிக் கொண்டு, கூட்டத்தை ஒரு நோட்டமிட்டாள். தன் சிற்றப்பன் வந்திருக்கிறாரா என்று விழிகளைச் சுற்றினாள். பூங்காவனத்தின் அப்பனைக்காணோம். பூங்காவனத்தையும் காணோம்! 'அட பாவி ஒக்கக்பொறந்த ரத்தமாச்சே!... தான் ஆடாட்டியும் தன்னோட சதை ஆடுமின்னு பூலோகத்திலே சொல்லிக்கிடுவாகளே!’ என்று நினைத்தாள்.

தன் சிற்றப்பனின் நினைவை எண்ணியவளுக்குப் பிறிதொரு ஞாபகம் சூடு காட்டியது.

ஒரு நாள் :

அப்போது செங்காளியப்பன் சேர்வை 'எட்டுக்கண் விட்டெறிந்து'- கொண்டிருந்த தருணம். டலாஞ்சூனிலிருந்து கொண்டு வித்து வந்திருந்தார். இளையவர் வெள்ளையப்பன் சேர்வை தனக்குரிய பாகத்தைப் பிரித்து வெட்டி விடும்படி வந்து கேட்டார் கூடப்பிறந்த பிறப்பிடம்.

வந்ததே கோபம் மூத்தவருக்கு! "ஏண்டா பயலே! ஒனக்கு அம்புட்டுத் தொலைவுக்கு துளிர் விட்டுப்போயிடுச்சா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:களத்துமேடு.pdf/80&oldid=1386121" இலிருந்து மீள்விக்கப்பட்டது