பக்கம்:களத்துமேடு.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80

களத்து மேடு

பரியந்தம் அந்த எமனுக்குக் கூட என்னை அண்டுறதுக்குக் கிலிதான் இனிமே!" என்று ஓங்காரமாகச் சொன்னார்.

தைலம்மை மணம் கமழ் நாணத்தின் பதுமையாகி, அந் நிலையின் சிலிர்ப்பு அவளது மலர்விழிகளிடை ஒடிவிளையாட, அவ்விளையாட்டின் மந்தகாசமான போதையுடன் பக்கவாட்டில் தன் நேசமச்சானைத் தேடிப்பார்த்தாள்.

அங்கே சரவணன் காணப்படவில்லை!

கைவிளக்கின் சூழலில் இருந்த அந்தக் கன்னி விளக்கு. இப்போது சுடர்விளக்கானது!

கதிர்க் கொத்து 8

சாப்பிட அழைத்தாள் !

ங்கிட்டாலே பறிஞ்சிட்டாங்களாம் எம்புட்டு சிலட்டூரு. மச்சான்காரர்!’ என்று தனக்குத்தானே கேள்வி வலைப் பின்னிக்கொண்டு சிந்தனை வசப்பட்டு நின்ற தைலம்மாளுக்கு, இருட்டின் கொடுமையை உணர முடிந்ததே யொழிய, வெளிச்சத்தின் உயிர்ப்பாக அவளுக்கு விடைகொடுக்க அங்கே சிலட்டூர் மாப்பிள்ளை சரவணன் தோன்றக் காணோம்! வெளி இருள் உள்ளே அவளைச் சூழ்ந்தது. மண்டை வலித்தது; மனமும் வலித்தது. வலியின் கூட்டு உறவுச் சக்தி அவளுக்கு நாவை வறளச் செய்தது. தாகம் மிஞ்சியது. அவள் முன்கட்டிலிருந்த முட்டியினைச் சாய்த்து நாலு குவளைத் தண்ணீரை வாயில் கொட்டிக் கொண்டாள். இதய தாகம் கட்டுக்கடங்கவில்லையோ? இல்லை. அவள் மனச் சிந்தனையின் காரணமாக நெஞ்சில் ஏற்பட்ட கொதிப்பை அணைக்கத்தான் அவள் கருதி அப்படித் தண்ணீரை ஊற்றிக்கொண்டாளோ?...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:களத்துமேடு.pdf/87&oldid=1386153" இலிருந்து மீள்விக்கப்பட்டது