பக்கம்:களத்துமேடு.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82

களத்து மேடு

உசிராக இருக்குது! அதுக்கு தக்கனை தான் அவுகளோட மனசும் செயல்காட்டுது!.. இப்ப எம் பொண்ணுக்கு பாசத்தைக் காட்டியும் நேசம் ஒசத்தியாத்தோணிட்டிருக்கிற காலம்! ம்...நானுமட்டும் இதுக்கு முந்தின சாமம் வரைக்கும் எப்பிடி இருந்தேனாம்?"...

தம்மைப்பற்றித் தாழ்வாக எண்ணிக்கூடப் பார்க்க விழையாத 'தங்கமான மனிதர்' செங்காளியப்பன் சேர்வை. ஆனால் இப்போது, அவர் தம்மைப்பற்றிய சுய தரிசன லயிப்பில் ஆழ்ந்துபோய்த் தம்மைப்பற்றிய திருவிளையாடல்களின் அவதார மகிமையை நூலெடுத்துப் பார்க்க முனைந்த நேரம் பார்த்துத்தானா, அங்கே அப்பொழுது சிங்காரம் மறுபடியும் வந்து நிற்க வேண்டும்.

"அம்மான்!"

பாவட்டா பீடியின் நாற்றத்தை உதட்டுக்கரையில் கரை சேர்த்துவிட்டவனாக, சுருட்டை முடிகளை நீவிவிட்டபடி கூப்பிட்டான் சிங்காரம். சீமை எண்ணெய் விளக்கின் கொழுந்துகள் அவனது கண்ணின் கருமணிகளின் துள்ளலை கச்சிதமாகக் காட்டின.

"வாப்பா!" என்றார் சேர்வை. நித்தம் நித்தம் அவனைப் பார்த்துக்கொண்டு வருகிற நினைப்பின் அசதியில் அவர் மிகவும் சர்வசாதாரணமாக வரவேற்றார். ஆனால் அவர் அவனை ஏறிட்டுப் பார்த்த பிற்பாடு விவரம் அவருக்கு மண்டையில் சூடுபிடித்தது. 'அக்கரைச் சீமையை நாடிப் போயிருந்த அக்கா மவனாச்சே, இப்பத்தான் வந்திருக்குது போலதோணுது!’ என்று அவர் தமக்குள் கணக்குப்போட்டுப் பார்த்தார். "வாப்பா சிங்காரம்!....குந்து பாயிலே! ஒன்னைப் பார்த்து அனையமாக்காலம் ஒடுப்புடுச்சே!...” காலத்தின் சோதனைகளிலே அவர் மனம் எதையெதையெல்லாமோ சிந்தித்தது. சிங்காரத்தின் தாய் சாவின் அரவணைப்பில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:களத்துமேடு.pdf/89&oldid=1386176" இலிருந்து மீள்விக்கப்பட்டது