பக்கம்:களத்துமேடு.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

களத்து மேடு

83

ஐக்கியப் பட்டதை அவர் எண்ணினாரா? இல்லை, அவனது போக்கு புலனாகாமல், நிலவரமும் மட்டுப்படாமல் அக்கரைச் சீமையே சதமென்று இருந்த காரணத்தால் ஒரு புதிய சம்பந்தத்துக்கு உடன்படுத்த முடியாமல் போய்விட்ட விதியின் விநயமான விளையாட்டினை எண்ணினாரா?

சிங்காரம் தன் அம்மானையே பார்த்தவாறு பாயில் குந்தினான். 'சடை' படர்ந்த விளக்கில் ஈர்க்குச்சியை நுழைத்து நிமிண்டி, சடையை விலக்கி, ஒளியை விளக்கினான். அவன் முகத்திரையில் தீவிரமான சிந்தனைக் கோடுகள் நிழலாடின.

அடுப்படியிலிருந்து கண்டாள் தைலம்மை,

வெளியில் சிங்காரத்தைக் கண்டதும், மெல்லிய சிரிப்புடன் மேலக்கோடித் தூணில் ஒதுங்கினாள். "அயித்தை மவன்காரக நேத்திக்கும் ஒங்களைத் தேடிவந்தாக!" என்று செப்பினாள்.

சேர்வை "அப்படியா?" என்று 'உம்' கொட்டிக்கொண்டார்.

"இப்ப எப்படி இருக்குது உங்க ஒடம்புக்கு?" என்று விசாரித்தான் அவன்.

"இப்பைக்குக் குத்தமில்லே!’’ ஏதோ தவறு இழைத்து விட்டவர்போல அவர் தடுமாறினார். அவனை முகம் பார்த்துப் பேசவே பயந்தார். 'சிங்காரத்தைப்பத்தின தாக்கல் அப்பவே வெளிச்சமாத் தெரிஞ்சிருந்தாக்க, எம் பொண்ணை இதுக்கே கட்டிக்கொடுத்துக்கூட இருக்கலாம்! ...ஆனா, தைலிப்பொண்ணு அப்ப என்ன வக்கணை பேசியிருக்குமோ அதையும் சொல்லமுடியாது!...எதுக்கும் லவிதம்னு ஒண்ணுப் படித்தானே சகலமும் நடக்கும். பூலோகத்திலே!'...மீண்டும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:களத்துமேடு.pdf/90&oldid=1386189" இலிருந்து மீள்விக்கப்பட்டது