பக்கம்:களத்துமேடு.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

களத்து மேடு

87

அவள் பரணில் இருந்து சிலம்புக் கழியை லாகவமாக எடுத்துக்கொண்டு இருட்டைத் துழாவி நடந்தாள். உடன் நடந்த வடக்குத் தெரு வங்குநாய்க்கு ஒரு கல்வீச்சுக் கொடுத்துவிட்டு விரைவுபாய்ச்சி நடந்தாள். அவள் மனத்தின் அடித்தளத்தில் இருவேறு ஓங்காரக் குரல்கள் எதிரொலிக்கத் தொடங்கின.

மடத்துக் குளத்தின் மேல் ஒண்டலில் ஆசாரி சோளக் கொல்லைக்கருகில் இருந்த புளிககடியில் சரவணனும் சிங்காரமும் சத்தமிட்டுப் பேசிக்கொண்டிருந்ததை அவள் அறிந்தாள். காரைப்பத்தைக்கு உட்பக்கமாக நெளிந்து, பின்தங்கினாள் தைலம்மை.

“உன்னை நல்லாப் புரிஞ்சுகிட்டேன், சரவணா!...நீ உன் இஷ்டப்படி எது வேணுமானாலும் செஞ்சிக்கிடு!... அப்பாலே, முடிவைப் பார்த்துக்கிடவும் தயாராயிரு!” என்று பெருங்குரலில் எச்சரித்தான் சிங்காரம்.

பதில் குரல் எழுப்பவில்லை சரவணன்.

தைலம்மைக்கு அடியும் புரியவில்லை; நுனியும் புரியவில்லை. பத்தையில் ஏதோ ஊறுவதுபோல சத்தம் கேட்டது. கழியால் பத்தையைத் தட்டிவிட்டவளாக விரைந்து அங்கிருந்து புறப்பட்டுப் புளியமரத்தடியில் போய் நின்றாள்.

தைலம்மையை அப்போது அவர்கள் இருவரும் எதிர் பார்க்கவில்லையோ, என்னவோ?

இருவருமே அயர்ந்துபோய்விட்டார்கள்!

“எனக்கு அலையிற வேலை மிச்சம்!... வாங்க ரெண்டு பேரும் சாப்பிட!” என்றாள் தைலம்மை. நீங்க ரெண்டு பேரும் முன்னாடியே சிநேகிதமா? ஆத்தாடியோ! ஆமா கொஞ்சமுந்தி பலத்த சத்தமாப் போட்டுப் பேசிக்கிட்டிருந்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:களத்துமேடு.pdf/94&oldid=1386878" இலிருந்து மீள்விக்கப்பட்டது