பக்கம்:களத்துமேடு.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

களத்து மேடு

39

நுனிகளில் கண்ணீர் துளிர்த்தது. அவருக்கும் அழுகை வருமா, என்ன?

ஆம்; பல ஊர்த் தண்ணீர் குடித்த செங்காளியப்பன் சேர்வைக்கும் கண்ணீர் வழிந்தது; பல பேர்களுக்குத் தண்ணீர் காட்டிய செங்காளியப்பன் சேர்வைக்கும் அழுகை வந்தது. சாவின் திருச்சபையின் சந்நிதானத்தை எட்டித்திரும்பி வந்தாரே அவர், அந்தப் புண்ணியத்தின் பலனா இம்மாறறம்?

‘செல்லாயி!...’

தமக்குள் வாய்விட்டு இந்தப் பெயரை உச்சரித்துக் கொண்டார். அதே மன உணர்வில், வேறு சில பெண்களின் வதனங்களும் இரண்டறக்கலக்கத் தொடங்கின என்னோட அந்தரங்க நாடகமெல்லாம் ‘என்னோட’ பொண்ணு தைலம்மைக்குத் தெரிஞ்சிருக்குமோ? தெரிஞ்சாக்க, அது தரை மீனாட்டம் தத்தனிச்சுப் போயிடாதா? ஐயோ, அந்தத் துப்பெல்லாம் எப்படியும் எம் மவளுக்குத் தெரியாமத் தப்பாதே?... அந்தச் சிலட்டூர் மாப்பிள்ளைக்கு என் கதை எட்டப்புடாதின்னு பயந்துக்கிட்டு இருந்தேனே? கடோசீயிலே அவுகளுக்கும் சங்கதி தெரிஞ்சிருக்கும் போலத்தானே தோணுது? அதுக்காகத் தானே அவுகளைத் தனியா அழைச்சுக்கிட்டுப் போனேன்! அதுக்குள்ளாற, எஞ் செல்லாயிக் குட்டிக்கு எப்படிப்பட்ட வினை விதிச்சிருச்சு?... ஐயோ, செல்லாயி! ஒன்னை இனிமே எப்பொறப்பிலே நான் காணப்போறேன்? பாவி நான்!... ஐயையோ, பெருங்காறை முண்டர் சாமியே!’

மீண்டும் அந்தப் பெரியவர் கண்களை மூடிமூடித் திறந்தார், மீண்டும் பெண்கள் சிலரது முகங்கள் தரிசனம் கொடுத்தன. செல்லாயியை முந்திக்கொண்டு, வேறொரு பிம்பம் அவரது உள்மனத்தினின்றும் மெல்ல மெல்ல எழுந்தது. ‘ஆ...! முத்தாயி!...’ என்று நடுக்கத்துடன் சொல்லிச் சிலிர்த்தார் அவர். கொண்டவள் நீ சிவலோகம் போனதி-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:களத்துமேடு.pdf/96&oldid=1386441" இலிருந்து மீள்விக்கப்பட்டது