பக்கம்:களத்துமேடு.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

92

களத்துமேடு

விட்டார். “அதெல்லாம் மெய்தான், ஆத்தா! எனக்குக் கவலை ஏது?... ஒங்கண்ணாலத்தை ஒன்னோட மனசுப் பிர காரம் நடத்தி வச்சுப்புட்டாக்க, எனக்கு அப்பறம் ஏது கவலை?...” என்று தெரிவித்தார்.

“இது நூத்திலே ஒரு சேதியுங்க, அப்பா!” என்றாள் தைலம்மை. ஆனால், அவளுடைய மனம் தன் தந்தையைப் பற்றிய ரகசிய நாடகத்தில் ஒட்டிக்கொண்டுதான் இருந்தது. அந்த வேதனையுடன் தான் அவள் வெளிப்பாவனைக்குச் சிரிப்பைக் காட்டிய வண்ணம் பதில் சொன்னாள். ‘அப்பன்காரர் சிநேகிதம் கொண்டிருந்த அந்தப் பொண்ணு யாரு? அவ இப்ப எங்கிட்டு இருக்கிறா?’ என்ற கேள்விகளை நெஞ்சில் சுமந்து குமைந்து கொண்டிருந்த பழைய நெட்டுயிர்ப்பும் அவளை அரவணைக்கத் தவறவில்லை. ‘ஒன் ஆத்தா முத்தாயி இருந்திருந்தால், ஒன் நிலையையே அலாதிதாண்டி, தைலி’ என்று அடிக்கொருவாட்டி தன் சிநேகிதி பொன்னாயி சொல்லி வந்ததை அவள் எவ்விதம் மறப்பாள்?

கைவிளக்கைத் தூண்டி விட்டார் சேர்வை. கைவிரல்கள் ஏனோ நடுங்கின. வாசல் திடலில் கிடந்த சரவணனின் ரேக்ளா அவர் பார்வையில் தட்டுப்பட்டது. காளை கத்தியது. எஜமானைக் காணாத தவிப்பில் அப்படிக் கத்தியது போலும்!

“ரெண்டு வைக்கப்பிறி பிடுங்கிப் போட்டுப்புட்டு வந்திடுறீயா?” என்றார் தைலம்மையின் தந்தை.

வாரப்பவே போட்டுப்புட்டுத்தான் வந்தேனுங்க அது மொதலாளியை ரொம்பப் பொழுதாக் காணலையில்ல, அதான் இப்பிடிக் கத்துது? வாயில்லாச் சீவனின்னாலும், “அதுக்குள்ள பாசம் நம்ம மனுச சாதிக்குக்கூட வரமாட்டாதுங்களே!” என்றாள் அவள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:களத்துமேடு.pdf/99&oldid=1386198" இலிருந்து மீள்விக்கப்பட்டது