பக்கம்:களப்பிரர் ஆட்சியில் தமிழகம்.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

105 களப்பிரர் ஆட்சியில் தமிழகம்

அருள்புரி பெரும்புகழ் அச்சுதர் கோவே!
இளையை ஆதலின் பனிமதி தவழும்
நந்தி மாமலைச் சிலம்ப
நந்திநிற் பரவுதல் நாவலர்க் கரிதே!

5. அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா



(தரவு)



நலங்கிளர் திருமணியும் நன்பொன்னும் குயின்றழகார்
இலங்கெயிற் றழலரிமான் எருத்தஞ்சேர் அணையின்மேல்
இருபுடையும் இயக்கரசர் இணைக்கவரி எடுத்தெறிய
விரிதாமம் துயரூஉம் வெண்குடைமூன் றுடனிழற்ற
வண்டாற்ற நாற்காதம் வகைமாண உயர்த்தோங்கும்
தண்டளிர்ப்பூம் பிண்டிக்கீழ்த் தகைபெறவீற் றிருந்தனையே

(தாழிசை)


ஒல்லாத பிறப்புணர்த்தும் ஒளிவட்டம் புடைசூழ
எல்லார்க்கும் எதிர்முகமாய் இன்பஞ்சேர் திருமுகமோ
ஏர்மலர மணிப்பொய்கை எழிலாம்பற் பொதியவிழ
ஊர்கோளோ டுடன்முளைத்த ஒளிர்வட்டம் உடைத்தன்றே?

கனல்வயிரம் குறடாகக் கனற்பைம்பொன் சூட்டாக
இனமணி ஆரமா இயன்றிருள் இரித்தோட
அந்தரத் துருளுநின் அலர்கதிர் அறவாழி
இந்திரர்கள் இனிதேத்த இருவிசும்பிற் றிகழ்ந்தன்றே?

வாடாத மணமாலை வானவர்கள் உள்ளிட்டார்
நீடாது தொழுதேத்த நிற்சேர்ந்த பெருங்கண்ணு
முகிழ்பருதி முகநோக்கி முறுவலித் துண்ணெகிழ்ந்து
திகழ்தகைய கோட்டைசூழ் திருநதிகள் திளைத்தன்றே?

(அம்போதரங்கம்)
(பேரெண்)


மல்லல் வையம் அடிதொழு தேத்த
அல்லல் நீக்கற் கறப்புனை ஆயினை
ஒருதுணி வழிய உயிர்க்காண் ஆகி
இரு துணி ஒருபொருட் கியல்வகை கூறினை

(இடையெண்)


1. இந்தப் பழைய செய்யுட்கள் யாப்பருங்கலம் பழைய விருத்தியுரையில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன.