பக்கம்:களப்பிரர் ஆட்சியில் தமிழகம்.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மயிலை சீனி வேங்கடசாமி 106

ஏடலர் தாமரை ஏந்தும் நின்னடி
வீடொடு கட்டினை விளக்கும் நின்மொழி
விருப்புறு தமனிய விளக்கு நின்னிறம்
ஒருக்குல கூடுற உஞற்றும் நின்புகழ்

(சிற்றெண்)


இந்திரர்க்கும் இந்திரன் நீ இணையில்லா இருக்கையை நீ
மந்திர மொழியினை நீ மாதவர்க்கு முதல்வனும் நீ
அருமை சால் அறத்தினை நீ ஆருயிரும் அளித்தனை நீ
பெருமைசால் குணத்தினை நீ பிறர்க்கறியாத் திறத்தினை நீ

(தனிச்சொல்)
எனவாங்கு
(சுரிதகம்)


அருள்தெறி ஒருவ! நிற் பரவுதுல் எங்கோத்
திருமிகு சிறப்பிற் பெருவரை அகலத்
தென்மிகு தானைப் பண்ணமை தெடுந்தேர்
அண்ணல் யானைச் செங்கோல் விண்ணவன்
செபிமனை செறுக்கறத் தொலைச்சி
ஒருதனி வெண்குடை ஓங்குக எனவே'

✽✽✽