பக்கம்:களப்பிரர் ஆட்சியில் தமிழகம்.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

113 களப்பிரர் ஆட்சியில் தமிழகம்

உலோச்சனாரும் மாதீர்த்தனாரும் சைன சமயப் புலவராகையால் அவர்கள் வச்சிரநந்தியின் சைன சங்கத்தில் இருந்திருக்க வேண்டும் என்பது இவர் கூறும் காரணமாகும். உலோச்சனாரும் மாதீர்த்தனாரும் சைனரா அல்லரா என்னும் ஆராய்ச்சியில் நுழையவேண்டியதில்லை. அவர்கள்சைன சமயத்தவர் என்றே வைத்துக் கொள்வோம். அவர்கள் சைனர் என்ற காரணத்தினாலே அவர்கள் வச்சிரநந்தியின்சைனத் திராவிட சங்கத்தில்தான் இருந்தார்கள் என்று கூறுவது உண்மை இல்லாத போலிக் காரணமாகும். பாண்டியரின் தமிழ்ச் சங்கத்தில் சைன பௌத்த மதத்தவர் உட்பட எல்லாச் சமயத்துப் புலவர்களும் தமிழ் ஆராய்ந்தார்கள். வச்சிர நந்தியின் தமிழ்ச்சங்க காலத்திலேதான் சைனமதம் தமிழ்நாட்டுக்கு வரவில்லை. கி.மு.மூன்றாம் நூற்றாண்டிலேயே சந்திரகுப்த மௌரியன், அசோகச் சக்கரவர்த்தி காலத்திலேயே சைன மதமும் பௌத்த சமயமும் தமிழகத்துக்கு வந்து விட்டதை வரலாறு கூறுகிறது. ஆகவே, பாண்டியரின் கடைச் சங்கத்திலே சைனப்புலவரும் இருந்தனர் என்பதில் ஐயமில்லை . இந்த வரலாற்று உண்மையை அறியாமல் வையாபுரியார் வச்சிரநந்தியின் தமிழ்ச்சங்கத்தில்தான் உலோச்சனார், மாதீர்தனார் போன்ற சைனசமயப் புலவர்கள் இருத்திருக்க வேண்டும் என்று கூறுவது ஆதாரமற்றப் போலிக் கூற்றாகும்.

வச்சிரநந்தியின் தமிழ சைனச் சங்கம் சைன சமயத்தாருக்கே உரியது. அதில் சைனத் துறவிகள் மட்டுமே இருந்தார்கள். வேறு சமயத்தவர்க்கு அதில் இடம் இல்லை . வச்சிர தந்தியின் சங்கத்துச் சைனத் துறவிகள் சிற்றின்பத்தில் (அகப்பொருளில்) ஈடுபடக் கூடாது. கள், இறைச்சி உண்ணக்கூடாது. கொலை செய்வது கூடாது. இவையெல்லாம் சைன சமயத்தின் அடிப்படையான கண்டிப்பான கொள்கைகள். ஆனால், வையாபுரியார், வச்சிரநந்தி சைனத் தமிழச்சங்கத்தில் இருந்தவர் என்று கூறுகிற உலோச்சனார் எதையெதைப்பாடினார் என்பதைப் பார்ப்போம்.

அகதானூற்றில் எட்டுப் பாடல்களும் குறுந்தொகையில் நான்கு செய்யுட்களும் நற்றிணையில் இருபது பாடல்களும் ஆக முப்பத்திரண்டு செய்யுட்களை உலோச்சனார் பாடியுள்ளார். இந்தப் பாடல்கள் எல்லாம் அகப்பொருள் துறையமைந்த காதற்பாட்டுகள். சைனமுனிவர் எதைப் பாடக் கூடாதோ அந்த அகப்பொருள் காதற்பாட்டுகளை இவர் பாடியுள்ளார். இந்தப் புலவர் சைனராக இருக்க முடியுமா? அதிலும் துறவிகள் மட்டும் உள்ள வச்சிரநந்தியின் திரமினச் சைன சங்கத்தில் இவர் இருந்திருக்க முடியுமா? மேலும், இந்தக் காதற்பாட்டுகளிலே கொலையையும் இறைச்சியையும் சிறப்பித்துப்பாடுகிறார் இந்த சைனத் துறவி!

மீன்களை மணலில் பரப்பி வெயிலில் உலர்த்துவதைக் கூறுகிறார். (அகம் 20, நற்றிணை,63,331) மீன்பிடிக்கும் வலையைப் பாடுகிறார் (அகம் 300) மீனைச் சுடுகிற நெருப்பிலிருந்து வருகிற புகையைப் பாடுகிறார்! {நற்றிணை 311) பனங்கள்ளைப் பாடுகிறார்! (நற்றினை 18) மதுபானம் செய்து மகிழ்ந்திருக்கும் பெரியன் என்பவனைப் பாடுகிறார்! (நற்றிணை