பக்கம்:களப்பிரர் ஆட்சியில் தமிழகம்.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மயிலை சீனி வேங்கடசாமி 136

அவர்கள், களப்பிரரின் இருண்ட காலம் இந்த நூலில் விடியற்காலம் ஆகிறது” எனவும், மேலும் வரலாற்றுச் சான்றுகள் கிடைக்குமாயின் “களப்பிரர் காலத்தின் பகற்காலத்தைக் காணக்கூடும்” எனவும் நம்பிக்கை தெரிவிக்கிறார்.

களப்பிரரின் இருண்ட காலம் எவ்வாறு வேங்கடசாமி அவர்களின் முயற்சியால் விடியற்காலம் ஆகிறது என்பதை அறிய இந்நூல் வெளிவருவதற்கு முந்தைய நாட்களில் களப்பிரர் காலம் குறித்து எத்தகைய கருத்துக்கள் இங்கே கட்டமைக்கப்பட்டு வந்தன என அறிதல் அவசியம்.

2.

களப்பிரர் கால வரலாற்றைக் கட்டமைப்பதற்கு மிக அடிப்படையான ஆவணமாக விளங்கும் வேள்விக்குடிச் செப்பேடுகள் 1923ம் ஆண்டு பதிப்பிக்கப்பட்டது. 1935ம் ஆண்டு கே.ஏ. நீலகண்ட சாஸ்திரியாரின் புகழ்பெற்ற ‘சோழர்கள்’ நூல் சென்னைப் பல்கலைக் கழகத்தால் வெளியிடப்பட்ட போது களப்பிரர் காலம் குறித்த சில உறுதியான கருத்துக்களை அவர் அதில் முன் மொழிந்திருந்தார்.

பாண்டியரது வேள்விக்குடிச் சாசனமும் பல்லவரது சில ஆவணங்களும் களப்பிரர் எனப்படும் தெளிவற்ற இருண்ட (obscure) குலம் ஒன்றைக் குறிப்பிடுகின்றன. பெரும் அரசியற் சீர்குலைவிற்கு (Political Unsettlement) இவர்கள் காரணமாயிருந்தனர். ஆறாம் நூற்றாண்டின் இறுதி வாக்கில் அவர்களை (அரசியலதிகாரத்திலிருந்து) தூக்கி எறிந்ததென்பது பாண்டிய - பல்லவரது அதிகாரங்கள் மீண்டும் அரியணை ஏறுதற்கான முதற்படியாக அமைந்தது. முற்காலச் சோழர்களின் அதிகாரம் முடிவிற்கு வருவதற்கும் கூட களப்பிரரின் காட்டுமிராண்டித்தனமான கொள்ளைக்காரச் செயற்பாடுகள் (Predatory activitles) காரணமாயின எனவும் நாம் கருதலாம் (Colas 1975 ம் ஆண்டு பதிப்பு, பக்கம் 100 - அழுத்தம் நமது)

என்று குறிப்பிடும் சாஸ்திரியார், களப்பிரர் கால பவுத்தப் பேரறிஞரான உறையூரைச் சேர்ந்த புத்ததத்தர் பற்றிச் சொல்லவரும்போது,

“சங்க இலக்கியம் பாய்ச்சுகிற ஒளி மங்கியதற்கும் மேலே குறிப்பிட்ட பாண்டிய பல்லவச் சாசனங்களின் மூலமான புதிய விடியல் (Fresh dawn) தொடங்கியதற்கும் இடைப்பட்ட இருண்ட காலத்தில் (dark period) (புத்ததத்தர்) வாழ்ந்திருக்க வேண்டும் என்பது உறுதி” (பக்.100- அழுத்தம் நமது)

என்றும் கூறுவது குறிப்பிடத்தக்கது. இறுதியாக,

“... எனினும் வேள்விக்குடிச் சாசனம், களப்பிர குலத்தைக் கலியரசர் எனச் சொல்வதிலிருந்தும் பல ஆதியரசர்களைக் களைந்தெறித்தவர்கள் எனக் கூறுவதிலிருந்தும், பிரம்மதேய உரிமைகளில் கைவைத்தவர்கள் என்று உரைப்பதிலிருந்தும் அவர்களால்