பக்கம்:களப்பிரர் ஆட்சியில் தமிழகம்.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மயிலை சீனி வேங்கடசாமி 138

புகுவதற்கு முன்பே தமிழகத்தில் புகுந்து சங்ககாலத் தமிழ் வாழ்வைச் சீரழித்தனர். அவர்கள் புகுவதற்கு முன் தமிழகம் நாடு புகழும் நலம் சிறந்து விளங்கிற்று. அத்தகைய தமிழகம் கல்வி, வணிகம், பொருள், அரசியல், சமயம் என்ற துறைகளில் களப்பிரர் வரவால் பெருவீழ்ச்சியுற்றது. அவ்வத் துறைகளை விளக்கும் தமிழ்நூல்கள் அழிந்தது அக்காலத்தேயாகும். சுருங்கச் சொல்லுமிடத்து தமிழர்களின் கல்வியைச் செல்வாக்கிழப்பித்துக், கடல் வாணிகத்தை உடலறக் கெடுத்துப், பொருள் விளக்கத்தை இருட்டடித்து அரசியலை அலைத்தொழித்துச், சமயத்தைக் குமைத்து நின்றது களப்பிரரின் கொடுங்கோலாட்சி என்பது அமையும்.... இக்களப்பிரர் பண்டைய வரலாற்றில் காணப்பட்ட போதிலும் அவர்கள் நிலைபெறத் தங்கி ஆட்சி நடத்தியதாக ஒரு நாளும் காணப்படவில்லை. எனவே அவர்கள் ஓரிடத்தும் நிலையாகத் தங்காமல் மக்களைச் சூறையாடுவதே தொழிலாகக் கொண்டிருந்த நாடோடிகள் எனத் தெரிகிறது.” (பக் 45, 46, அழுத்தம் நமது).

எனக் கடுஞ் சொற்களால் சாடுவதனூடாக நிலையாகத் தங்கி அரசாளுதலின் சிறப்பையும் நாடோடித் தன்மையின் கொடுங்கோன்மையையும் வலியுறுத்துவது கவனிக்கத்தக்கது. தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம் 1972ல் வெளியிட்ட ‘தமிழக வரலாறு: மக்களும் பண்பாடும்’ நூலில் பேராசிரியர் கே.கே.பிள்ளையவர்கள்,

“தமிழகம் கி.பி. 3ம் நூற்றாண்டு தொடக்கத்திலேயே களப்பிரர் என்ற ஒரு குலத்தாரின் படையெடுப்புக்கு உட்பட்டு அல்லலுற்றது. அவர்கள் தமிழரல்லர்; பிற மொழியினர். அவர்கள் மாபெரும் சூறாவளியைப் போல நாட்டில் நுழைத்து மக்களைக் கொன்று குவித்து உடமைகனைச் சூறையாடினார்........ அயல்நாட்டினர் வேறு ஒரு நாட்டை வென்று கைக்கொண்ட பிறகு அவர்களது மொழி, இலக்கியம், கலை, நாகரீகம் ஆகியவற்றை அழிப்பதையே தம் முதற்கடமையாகக் கொள்வர். இது வரலாறு கண்ட உண்மையாகும். ....தமிழகத்தில் இவர்களால் ஏற்பட்ட குழப்பமும் இழப்பும் அளவிறந்தன. இவர்கள் கொடுங்கோலர்கள், கலியரசர்கள்” (பக் 171,172-அழுத்தம் தமது)

என்று குறிப்பிடுவார். குழப்பம் மிகுந்த காலம் என்கிற கருத்தாக்கத்தை பேரா. என்.சுப்பிரமணியம் அவர்களும் குறிப்பிடுவார் (Sangam Polity, Asia Publishing House, 1966, பகா.) சங்கம் அழிக்கப்பட்டது களப்பிரர்களால் தான் எனவும் அவர் உறுதியாய்ச் சொல்வார்.

சுருக்கம் கருதி அறிஞர் சதாசிவப் பண்டாரத்தார் முதலான வேறு பல வரலாற்றாசிரியர்கள் களப்பிரர் பற்றிச் சொன்ன கடுஞ் சொற்களைத் தவிர்ப்போம். சீனி.வேங்கடசாமியவர்களின் நூலுக்குப் பின்னால் வந்ததாயினும், அந்நூலின் கருத்துக்களை வெளிப்படையாக மறுக்காமல் முன்னாற் சொல்லி நிலைநிறுத்தப்பட்ட கருத்துக்களையே மீண்டும்