பக்கம்:களப்பிரர் ஆட்சியில் தமிழகம்.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

147 களப்பிரர் ஆட்சியில் தமிழகம்



என்பதைத் தேவையற்றதாக்க வில்லை.

(3) புதிதாக உருவான பிரபுக்கள் (aristocrazy) பணக்காரர்கள், வணிகர்கள் ஆகியோரின் முன்பாக அரசியல் ரீதியாகப் பலவீனமடைந்த வேந்தர்கள் நிற்க முடியவில்லை. வேந்தர்கள், வேள்வி/வேதங்கள் ஆகியவற்றுடன் தொடர்புடையவர்களாயின் இந்தப் புதிய அதிகார மய்யங்கள் பவுத்த, சமண மதங்களுடன் தொடர்புடையனவாக இருந்திருக்கக் கூடும். களப்பிரர் காலத்தில் இம் மதங்கள் ஒங்கி நின்றன.

எனவே பேராசிரியரின் கருத்துப்படி களப்பிரர் காலம் என்பது விவசாய மயமாக்கலின் விளைவாக உருவான புதிய பிரபுத்துவம் எழுச்சி பெற்ற காலம் என்றாகிறது. வேந்தர்கள் வைதீக மயமானபோது இந்தப் புதிய பிரபுத்துவம் மட்டும் அவைதீக மரபில் தம்மை இனம் கண்டதேன்? வேந்துகள் பலவீனப்பட்டதால் புதிய பிரபுத்துவத்தின் கை ஓங்கியது என்பதும் பொருத்தமாய்ப்படவில்லை. அதேன் மூன்று பாரம்பரியங்களும் ஒரே சமயத்தில் பலவீனமடைந்தன? அதெப்படி வலிமையான வாரிசுகள் ஒரே நேரத்தில் உருவாகவில்லை? சிவத்தம்பியவர்களின் ஆய்வு இந்தக் கேள்விகட்கு விடையளிப்பதாயில்லை. விவசாய மயமாதலினால் உருவான புதிய பிரபுத்துவம் அவைதீக மரபைச் சார்ந்ததாக இருந்தது எனச் சொல்வது பிற ஆதாரங்களுடன் பொருந்துவதாகவும் இல்லை.

சிவத்தம்பியவர்கள் மார்க்சிய ஆய்வு முறையை ஏற்றுக் கொண்டவர். உற்பத்தி உறவுகள், உற்பத்தி சக்திகளுக்கிடையிலான முரண்டாட்டில் வரலாற்று இயக்கத்தைக் காண்பவர். எனினும் மையப்படுத்தப்பட்ட ஒரு அரசியல் உருவாக்கம் என்பது வளர்ச்சிக்கு இன்றியமையாத நிபந்தளை என நம்புபவர். விவசாயமயமாக்கலினால் உருவான புதிய ஆதிக்க வர்க்கங்களின் பால்தான் அவர் கவனம் சாய்கிறதேயொழிய விவசாயமயமாக்கலினால் தமது மண்ணையும் வாழ்வையும் இழந்த அடித்தள மக்களின்பால் அவர் பார்வை திரும்பவில்லை.

"களப்பிரர் படை எடுப்பு (invasion) நாம் இதுகாறும் பார்த்தது போல, ஒரு ஒருங்கிணைக்கப்பட்ட அரசியல் உருவாக்கத்திற்கு (unified political entity) வழிவகுக்கலில்லை . பல்வேறு பகுதிகளில் பல்வேறு குடும்பங்கள் சிதறுண்டு அரசமைத்ததின் மூலம் பொதுவான குழப்பம் களப்பிரர் ஆட்சியில் மேலும் அதிகமாகியது” (அதே நூல், பக் 181-அழுத்தம் நமது)

என்று அவர் கூறுவதிலிருத்து களப்பிரர் காலம் என்பது பெருங்குழப்பமான காலம் என்கிற முந்தைய ஆசிரியர்களின் கருத்துக்களிலிருந்து அவர் பெரிதும் வேறுபடவில்லை என்பது விளங்குகிறது. குழப்பத்திற்கே களப்பிரர்கள்தான் காரணம் என்று சைவ அறிஞர்கள் சொன்னார்களெனில் சிவத்தம்பியவர்கள் குழப்பத்தின் விளைவாகவே களப்பிரர் படையெடுப்பு சாத்தியமாயிற்று