பக்கம்:களப்பிரர் ஆட்சியில் தமிழகம்.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மயிலை சீனி வேங்கடசாமி 148

என்றும் களப்பிரர் வரவால் குழப்பம் மேலும் அதிகமாயிற்று என்றும் முடிக்கிறார். அரசியல் ரீதியாகக் சிதறுண்டு போதலுக்கு (Political fragmentation) எதிரான குரலை வலிமையாக ஒலிக்கும் பேராசிரியர் இத்தகைய சிதறுண்டு போதலுக்கு எதிரான கருத்தை ஒலித்து ஒரு பெரிய அரசுருவாக்கத்தின் தேவையை வற்புறுத்திய காவியமாகவே சிலப்பதிகாரத்தைக் காண்கிறார் (பக். 182).

சங்க கால வீழ்ச்சியின் பிரதான கூறுகளைச் சரியாகவே இனங்கண்ட சிவத்தம்பி, களப்பிரர் கால சமூக இயக்கத்தையும் முரண்களையும் சரியாக விளக்க இயலாமற் போனதைக் கண்டோம். பர்ட்டன் ஸ்டெய்னின் ஆய்வு (1980) இப்பகுதி ஓரளவு துலக்கம் பெறுவதற்கு தமக்கு உதவுகிறது.

வமிச பாரம்பரிய நோக்கிலிருந்து வரலாற்றை எழுதுவது ஸ்டெய்னின் நோக்கமன்று. தென்னிந்தியாவில் மத்திய காலத்தில் அமைத்த விவசாயச் சமூகம் மற்றும் விவசாயம் சார்ந்த அரசமைப்பை ஆய்வு செய்தவர் அவர். இனக்குழுச் சமூகங்களை அழித்துத்தான் உலகெங்கிலும் விவசாயச் சமூகங்கள் நிலைபெறுகின்றன. இனக்குழுச்சமூகங்களிடையே புழக்கத்தில் இருந்த நீர்ப்பாசனத்தை நம்பியிராத புராதன விதைப்பு முறை என்பது தொழில் நுட்ப ரீதியில் விவசாயச் சமூகங்களின் சாகுபடி முறையைக் காட்டிலும் மிகவும் உற்பத்தித் திறன் குறைந்த ஒன்று. ஏரி, குளம் முதலானவற்றில் நீரைத் தேக்கி ஆறுகளின் கரைகளை உயர்த்தி, பாசனத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் விவசாயச்சமூகங்களின் இன்னொரு முக்கிய பண்பு அவை ஆற்றங்கரைகளிலும் சமவெளிகளிலும் அமைந்த வளமான வண்ட ல் மண் பகுதிகளில் நிரந்தரக் குடிகளாக (Agriculture settlements) உருப்பெறுவது. இனக்குழுக்களின் புராதன விதைப்பு முறையோ இடம்விட்டு இடம் பெயரும் (swifting/shifting cultivation) தன்மையிலானது. இவ்வகையில் நிரந்தரக் குடியிருப்புகளாக உருப்பெறும் (sedantary) விவசாயச் சமூகங்களையும் சற்றே நாடோடித் தன்மையிலான (nomadic) இனக்குழுச் சமூகங்களையும் வேறுபடுத்திப் பார்த்தல் அவசியம். உற்பத்தித் திறன் வாய்ந்த விவசாயச் சமூகங்கள் உற்பத்தித் திறன் குறைந்த புராதன இனக்குழுச் சமூகங்களை அழித்தொழித்ததும், இரண்டாம் நிலைக் குடிமக்களாக விவசாயச் சமூகத்திற்குள் அவர்களை உட் செரித்துக் கொண்டதுமே உலக வரலாறாக இருந்து வந்துள்ளது. விவசாயச் சமூகம் உருப்பெற்று நிலைபெறுவதற்கு இடைப்பட்ட காலமென்பது பாசன அடிப்படையிலான விவசாயச் சமூகத்திற்கும் பாசனம் சாராத இனக்குழுச் சமூகத்திற்கும் இடையில் கடும் முரண்களும், எதிர்ப்புகளும், ஆயுதம் தாங்கிய கலவரங்களும் நிறைந்ததாகவே இருந்தது.

சங்ககால இறுதி தொடங்கி களப்பிரர் காலத்திறுடாக நடைபெற்ற இந்த எதிர்ப்புகள் மீது கவனத்தை ஈர்க்கிறார் ஸ்டெய்ன். சங்க காலத்தில் இத்தகைய விவசாய மயமாதல் தொடங்குகிறது. இனக் குழுச் சமூகங்களை அழித்து வேந்துகள் உருவாகின்றன. விவசாய மயமாதலுடன் வேத்துருவாக்கங்கள் இணைத்திருந்ததை முன்பே பார்த்தோம். சங்க