பக்கம்:களப்பிரர் ஆட்சியில் தமிழகம்.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மயிலை சீனி வேங்கடசாமி 150

மேலாண்மைக்கான ஒரு தொடர்ச்சியான போராட்டமாக நீண்ட காலம் நீடித்தது. இந்தப் பின்னணியிலேயே களப்பிரர் காலத்தைப் பார்க்க வேண்டும் என்கிறார் ஸ்டெய்ன்,

இது வரை வரலாற்றாசிரியர்களால் முன் வைக்கப்பட்டது போல களப்பிரர் என்போர் வெளியிலிருந்து வந்த படையெடுப்பாளர்களா? இல்லை, அது உள்நாட்டுக் குடிகளின் வெற்றியா? ஒற்றைக் குலத்தைச் சேர்ந்தவர்களா? பல்வேறு படை எடுப்பார்களா? கிடைக்கும் சான்றுகளை வைத்துக் கொண்டு உறுதியாக ஒன்றும் சொல்ல இயலவில்லை எனக் கூறும் (பக். 76) ஸ்டெய்ன், சமவெளிகளின் உள்ளூர்த் தலைமைகளும் (local chiefs) கிராமங்களில் தானங்கள் பெற்று வாழ்ந்திருந்த பார்ப்பனர்களும் இவர்களால் கீழிறக்கப்பட்டது (abused) என்பது மட்டும் தெரிகிறது என்கிறார். சமவெளிப் பகுதி மக்களிலிருந்து வேறுபட்ட இந்த வெற்றியாளர்கள் பவுத்த, சமண நிறுவனங்களைத் தவிர சில இந்து நிறுவனங்களுக்கும் ஆதரவளித்தனர் என்றும் ஸ்டெய்ன் குறிப்பிடுவார். இறுதியாக,

களப்பிரர் இடைவெளி (Kalabra Interegnun) எனச் சில நேரங்களில் குறிப்பிடப்படுகிற இக்காலகட்டம் என்பது விவசாயம் சாராத மக்கள் non-peasant people) ஒரு குறிப்பிட்ட அளவிலான விவசாயச் சமூகத்தையாவது தங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கு மேற்கொள்ளப்பட்ட கடும் முயற்சிகளின் காலமாக இருந்திருக்கலாம். தீபகற்பத்தின் தென் கோடியில் இது நிகழ்ந்திருக்கலாம். இங்குதான் பாண்டியரின் சாசனங்கள் கடுஞ் சொற்களில் களப்பிரர்களைக் குறிக்கின்றன. பாண்டிய நாடாயினும் அல்லது வேறெங்காயிலுஞ்சரி இந்தத் தாக்குதல் (Onslaught) என்பது விவசாயுச் சமூக விரிவாக்கத்திற் கெதிரான விவசாயம் சாராத மக்களின் நீண்டட கால ஆயுதத் தாங்கிய போராட்டத்தின் உச்ச இறுதியில் நிகழ்ந்திருக்க வேண்டும். சோழமண்டல விவசாயக் கலாச்சாரத்தின் முக்கியமான கூறுகளை ஏற்றுக் கொள்ளாமலே விவசாயம் சார்த்தவர்களின் மீதான தங்களின் செல்வாக்கை நீலகண்ட சாஸ்திரியால் 'தொல்லைதரும் இடைமறிப்பாளர்கள்' (interlopers) என அழைக்கப்பட்டவர்கள் உறுதி செய்திருக்க வேண்டும். (ஆனால்) இவர்களின் இந்த முயற்சி தோற்றது. ஆறாம் நூற்றாண்டின் இறுதியில் வடக்கிலும் மத்தியிலும் உள்ள சமவெளிகளில் பல்லவர்களும், தெற்குச் சமவெளியில் பாண்டியர்களும் தங்களை நிலைநிறுத்திக் கொண்ட பின்பு எக்காலத்திலும் விவசாயச் சமூகத்தின் ஆதிக்கம் வீழவேயில்லை ."

(அதே நூல்.பக். 77) ,

என்று குறிப்பிடும் பர்ட்டன் ஸ்டெய்ன் களப்பிரரின் வீழ்ச்சிக்கான காரணத்தைத் தொட்டுக் காட்டுகிற புள்ளி மிக மிக முக்கியமானது. மலைசார்ந்த மற்றும் புஞ்சை நிலப்போர்ச் சமூகங்கள் தொடர்ந்து விவசாயக் குடியிருப்புகளின் விளிம்புகள் மீது தாக்குதல்கள் புரிந்த போதும்,