பக்கம்:களப்பிரர் ஆட்சியில் தமிழகம்.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மயிலை சீனி வேங்கடசாமி152

மு.அருணாசலம், களப்பிரர் தமிழரல்லர் என்பதற்குரிய ஆதாரங்களில் ஒன்றாக களப்பிரர் என்னும் சொல் சாசளத்தில் கிரந்த எழுத்தில் எழுதப்பட்டுள்ளதைச் கட்டிக் காட்டுவார் அவர். களப்பிரரால் முடியிறக்கப்பட்ட தமிழ் ஆதிராசர்களையும்கூட கிரத்தத்திலேயே குறிப்பிடுவது ஏன் என்பதை அவர் விளக்கினாரில்லை . பெருவழுதி, தேர்மாறன், தற்கொற்றன், கேள்வி அந்தணாளர், நீடு புக்தி துய்த்தபின், ஆதிராஜர், கலியரசன், மானம் போர்த்த தானை வேந்தன், மதுபமல், மேல் நாள், நின்குரவர்கள், பால் முறையின் வழுவாமை, நாட்டால் நின் பழமையாதாய், நற்சிங்கள், அங்கு அப்பொழுதே முதலான சொற்களுக்கு நீண்ட விளக்கங்கள் எழுதச் சிரமம் எடுத்துக் கொள்ளும் அருணாசலம் கண்டு கொள்ளாத வேறுசில சொற்கள், வாக்கியங்களின் பால் தாம் திரும்புவோம். முக்கியமாய்ப்படுகிற சிலவற்றைப் பார்க்குமுன் இச்சாசனம் குறித்த ஒரு சிறு குறிப்பு:

பராந்தகன் நெடுஞ்சடையன் என்னும் பாண்டிய மன்னன் ஒரு நாள் மதுரையில் நகர் வலம் வருகையில் கொற்கைக் கிழான் நற்சிங்கன் என்றும் பார்ப்பனன் அவன்முன் வீழ்ந்து ஒரு முறையீட்டைச் சமர்ப்பிக்கின்றான். நெடுங்சடையனின் முன்னோனும் சங்க காலப் பாண்டியனுமாகிய பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியின் காலத்தில் நற்சிங்கனின் முன்னோனாகிய நற்கொற்றன் என்னும் பார்ப்பனன், அரசனுக்காக ஒரு வேள்வி நடத்திக் கொடுத்தான் எனவும், அதற்குப் பரிசாகப் பாண்டிய மன்னன் பாகலூர்க் கூற்றத்தைச் சேர்ந்த வேள்விக்குடி என்னும் கிராமத்தை அப்பார்ப்பனின் பரம்பரைக்கு மானியமாகத் தாரை வார்த்துக் கொடுத்தான் எனவும், அந்த மானியத்தைப் பாண்டியருக்குப் பின் வந்த களப்பிரர் என்னும் கலியரசர் பிடுங்கிக் கொண்டதாகவும், தனக்கு உரிமையான அதை மீண்டும் திருப்பித் தர வேண்டும் எனவும் தற்சிங்கன் முறையிடுகிறான். ஆவணங்களைப் பரிசீலித்த நெடுஞ்சடையன் அவ்வாறே அப்பார்ப்பனனுக்கும் அவனைச் சேர்ந்தவர்களுக்கும் வேள்விக் குடியைத் திருப்பித் தருகிறான். வடமொழியிலும் தமிழிலும் ஆக்கப்பட்ட பதினெட்டு பக்கங்களிலானது இச் செப்பேடு, இதில் களப்பிரரை வீழ்த்திய கடுங்கோன் தொடங்கி நெடுஞ்சடையன் ஈறான பாண்டிய வமிசப் பரம்பரையும் அவர் தம் பெருமைகளும் விரிவாய்ச் சொல்லப்படுகின்றன. இனி சில முக்கிய வரிகள்!

சுருதி மார்க்கம் பிழையாத கேள்வியந்தணாளர் வேள்வி முற்றுவித்து" (வரி 5,6) வேள்விக்குடியைப் பெற்றனர்.

அளவரிய ஆதிராஜரை அகல நீக்கு அகலிடத்தைக் களப்பிரன் என்னும் கலியரசன் கைக் கொண்டதனை இறக்கி" (வரி 11, 12) பாண்டியன் கடுங்கோனின் சாதனை.

"பிறர்பாலுரிமை திறவிதி நீக்கித் தன்பாலுரிமை நன்களம் அமைத்த மானம் பேர்த்த தானை வேந்தன்" (வரி 19-20-21) கடுங்கோன்.

“மகீதலம் பொதுநீக்கி" (வரி 24)...." மண்மகளை மறுக்கடித்து" (வரி 29) அரசாண்டவன் அவன்

"விரவி வத்தடையாத பரவரைப் பாழ்படுத்தும், அறுகாலினம்