பக்கம்:களப்பிரர் ஆட்சியில் தமிழகம்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

களப்பிரர் ஆட்சியில் தமிழகம்

15

சந்திரகிரி மலையின் பழைய பெயர் களபப்பு பெட்ட (பெட்ட - மலை) என்று கூறப்பட்டது.[1]

ஹொஸகோட்ட தாலுகாவில் கிடைத்துள்ள பழைய வீரகல் சாசனம் கன்னடமொழியில் பழைய கன்னட எழுத்தில் எழுதப்பட்டிருக்கிறது. இதில் களப்பிர இராச்சியம் கூறப்படுகிறது. இதன் வாசகம் இது: 'ஸ்வஸ்திஸ்ரீ மதுரானக் கள்வர திருராஜ்யதல் மள்ளே கவுண்டரும் சாவா காவுண்டுரு துயீநாத பல்கனிளலுதுவ காமூண்ட ஸத்த எர்ரதயக் கர்ளனபூழ்திகம்.[2] இதனால், களபப்பு நாடு களவர இராச்சியம் என்பது மைசூர் தேசத்தில் இப்போது சிரவண பௌகொள என்று கூறப்படுகிற வட்டாரத்தைச் சேர்ந்திருந்தது என்பது தெரிகிறது. களவர் நாடு, களப்பிரர் நாடு என்னும் பெயர்கள் வேறு சாசனங்களிலும் கூறப்படுகின்றன.[3] திருத்தொண்டர் புராணம் கூறுகிற 'வடுகக் கருநாடர் மன்னன்' இந்தக் களபப்பு நாட்டைச் சேர்ந்தவன் என்று கருதலாம்.

கருநாடதேசத்தில் இருந்த களப்பிரரின் களப்பு இராச்சியம் மைசூர் நாட்டைச் சேர்ந்த கோலார் (கோலாலபுரம்) வரையிலும் பரவியிருந்தது. கோலாலபுரத்திலுள்ள நந்திமலை களப்பிரரின் மலை என்று கூறப்படுகிறது.[4] பழைய தமிழ்ச் செய்யுட்கள், தமிழகத்தை யாண்ட களப்பிரரை நந்தி என்றும் தந்திமலையையுடையவர் என்றும் கூறுகின்றன: "நந்தி மால்வரைச் சிலம்பு நந்தி," "புகழ்துறை நிறைந்த பொருவேல் நந்தி."

கன்னட நாட்டுக் களபப்பு இராச்சியத்தை யாண்ட களப்பிரர் எப்பொழுதும் சுதந்தரராக இருக்கவில்லை. அவர்கள் கடம்பர், கங்கர் போன்ற வேறு அரார்களுக்கு வெவ்வேறு காலத்தில் அடங்கி யிருந்தனர் என்பது தெரிகிறது. கடம்ப அரசனான சாகுஸ்தன் (கி.பி. 425-450) களபோரருக்குப் (களப்பிரர்) பகைவன் என்று பேலூர்தாலுகாவில் ஹல்மிடி என்னும் ஊரிலுள்ள கல்வெட்டு எழுத்துக் கூறுகிறது.[5] களபப்பு நாட்டின் அரசனான திண்டிகன் என்பவன், மேலைக்கங்க அரசனான ஸ்ரீபுருஷனுடைய அனுமதி பெற்று ஒருதானத்தைக் கொடுத்தான் என்று ஒரு சாசனம் கூறுகிறது.[6] இதிலிருந்து களடப்பு அரசர் சில காலம் கங்க அரசருக்குக் கீழடங்கியிருந்தனர் என்பது தெரிகிறது.

மேற்கூறிய சான்றுகளினாலே கன்னட நாட்டவராகிய களப்பிர அரசர் அங்கு ஒரு பகுதியான களப்பிர நாட்டையரசாண்டனர் என்பது தெரிகிறது. அவர்கள் ஏழத்தாழ கி.பி.250-ல் அல்லது அதற்குச் சற்றுப் பின்னர் தமிழகத்தைக் கைப்பற்றிச் சேரசோழபாண்டிய நாட்டையரசாண்டனர் என்று கருதலாம்.


  1. பக். 13,14, கர்நாடக இதி ஹாஸ தர்ஸன (கன்னட தேசத்தின் வரலாறு) டாக்டர் எம்.வி.கிருஷ்னராவ், எம் கேசவபட்ட, 1970.
  2. Epi.Car. Val IX, Haskipta 13, p. 188.
  3. Epi Car Vol X, Chinlamgari, 9.
  4. Epi, Car, Vol X, Chickbalpur: 9
  5. Mysore Archasclogical Report 1936 NO 16
  6. Myscre Arch. Rep. 1927, No.118