பக்கம்:களப்பிரர் ஆட்சியில் தமிழகம்.pdf/163

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மயிலை சீனி வேங்கடசாமி 162

மலைத்ததானை மதவிலகள் மன்னர்கோ னருனிற் பெற்றும் கோல்வனைக்கும் வேற்றானைப் 150
பல பல்வளைக்கோள் கொணரப்பட்டுப்
பொரவந்தவர் மதந்தவிர்க்கும்
கரவந்தபுரத்தவர் குலத்தோன்றல்
மாவேந்தும் கடற்றானை மூவேந்தமங்கலப் பேரரையனாகிய வைத்யசிகாமணி மாறங்காரி
இப்பிரம தேயம் உடைய
கொற்கைகிழான் காமக்காணி கவரஞ்சிங்கன்
இதனுள் மூன்றிலொன்றும் தனக்குவைத்
திரண்டுகூறும் ஐம்பதின்மர் பிராமணர்க்கு
நீரோடட்டிக் கொடுத்தான்; இதனுள் 160
மூர்த்தி எயினன் சவையோ டொத்தது
நான்கரை படாகாரம் உடையன்; இதனுள்
தனக்குவைத்த ஒரு கூற்றிலுத்தம்பிமார்க்கு நான்குந்தஞ்
சிற்றப்பனார் மக்களுக்கு ஆறும்
சபையோ டொத்த படாகாரங் கொடுத்தான்;
இப்பிரசஸ்தி பாடின சேனாபதி ஏனாதி ஆயின
சாத்தஞ்சாத்தற்கு மூன்று கூற்றாருமாய்த்
தங்களோ டொத்த நான்கு படாகாரங் கொடுத்தார்;
மற்றிதனைக் காத்தார் மலரடியென் முடிமேல் என்று
கொற்றவனே பணித்தருளித் 170
தெற்றெனத் தாம்ர சாசனஞ் செய்வித்தான்;
இஃதெழுதின சுத்தகேசரிப் பெரும்பணைக் காரனுக்கு
பெருமக்கள் அருளாற் பெற்றது ஒரு இல்லவளாவும்
இரண்டுமாச் செய்யும் ஒரு புஞ்சையும் பெற்றான்:
இவை யுத்தகேசரிப் பெரும்பணைகாரன் எழுத்து. 175

✽✽✽