பக்கம்:களப்பிரர் ஆட்சியில் தமிழகம்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மயிலை சீனி வேங்கடசாமி

56

"அங்கொருநாண் மாடமாமதிற் கூடற்பாடு நின்றவர் ஆக்ரோதிக்கக் கொற்றனேய் மற்றவரைத் தெற்றென நன்கு கூவி'என்னேய் நுங்குறை' என்று முள்ளாகப் பணித்தருள 'மேனாணின் குரவராற் பான்முறையின் வழுவாமை மாகந்தோய் மலர்ச்சோலைப் பாகனூர்க் கூற்றத்துப் படுவது, ஆள்வ தானை அடல் வேந்தேய்! வேள்விக்குடி என்னும் பியர் உடையது ஒல்காத வேற்றாளை ஓடோதவேலி உடன் காத்த பல்யாக முதுகுடுமிப் பெருவழுதி என்னும் பரமேச்வரனால் வேள்விக்குடி என்னப்பட்டது. கேள்வியாற் றரப்பட்டதனை துளக்கமில்லாக் கடற்றானை யாய் களப்ர ராலிறக்கப் பட்டது என்று நின்றவன் விஞ்ஞாப்யஞ் செய்ய......"[1]

களப்பிரர், வேள்விக்குடி தானத்தை இறக்கினார்கள் என்று செப்பேடு கூறுவது உண்மைதான். ஆனால், அதன் காரணம் பார்ப்பனர் மாட்டுப் பகையன்று. அதற்கு வேறு ஏதோ காரணம் இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. களப்பிரர் பிராமணருக்குப் பகைவர் அல்லர். களப்பிரர் பிராமணருக்குத் தானங்கொடுத்து ஆதரித்ததை 'அகலிடமும் அமருலகும்' எனத் தொடங்குகிற செய்யுள் (இணைப்பு 1 காண்க) கூறுகிறது.

பொருகடல் வளாகம் ஒரு குடை நிழற்றி
இருபிறப் பாளர்க் கிருநிதி ஈந்து
மனமகிழ்த்து
அருள்புரி பெரும் அச்சுதர் கோவே

என்று அந்தச் செய்யுள் கூறுவது காண்க. இதனால் களப்பிரர் பார்ப்பனரை வெறுத்தவர் அல்லர் என்பது தெரிகிறது.

ஜைன சமய வளர்ச்சி

ஜைன பௌத்த மதங்கள் செழித்து வளர்ந்ததையும் சைவ வைதிக மதங்கள் ஒடுங்கிப் போவதையும் சேக்கிழார் பெரிய புராணத்தில் தெளிவாகக் கூறுகிறார்.

மேதினிமேல் சமண்சையர் சாக்கியர்தம் பொய்ம்மிகுத்தே
ஆதி அரு மறைவழக்கம் அருகி அரன் அடியார் பால்
பூதிசாதன விளக்கம் போற்றல் பெறாதொழியக் கண்டு
ஏதமில் சீர் சிவபாத விருதயர்தாம் இடருழந்தார்'[2]

களப்பிரர் காலத்தில் வளர்ந்து சிறப்படைந்திருந்த ஜைன பௌத்த மதங்கள் அவர்களின் ஆட்சிக் காலத்துக்குப் பிறகும் சிறப்படைந் திருந்ததைச் சேக்கிழார் கூறுகிறார்.

மெய்வகை நெறியில் நில்லா வினை அமண் சமயம் மிக்குக்
கைவகை முறைமைத் தன்மை கழியமுள் கலங்குங்காலை[3]


  1. வேள்விக்குடிச் செப்பேடு, வரி 104-112.
  2. திருஞான சம்பந் நாயனார்புராணம் 18 சமண் - சமணர்; சாக்கியர் பௌத்தர்; அருவறை வழக்கம் - வேத வேள்வி செய்யும் வைதிக மதம்: அரன் - சிவன், பூதிசாதனம் - திருநீற்றுச் சாதனம்)
  3. திருஞானசம்பந்த நாயனார் புராணம் 599