பக்கம்:களப்பிரர் ஆட்சியில் தமிழகம்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மயிலை சீனி வேங்கடசாமி

5

காணப்படுகின்றன. களப்பிரர் வருவதற்கு முன்னேயே இந்தக் குகைகளில் ஜைன முனிவர் இருந்து தவஞ்செய்தனர். சில குகைகளில் பௌத்தப் பிக்குகளும் தங்கித் தவஞ்செய்தார்கள்.

களப்பிரர் ஆட்சிக் காலத்திலே, பல்லவ அரசர் ஆட்சி செய்த தொண்டை நாட்டிலும் ஜைனமதம் சிறப்பாக இருந்தது. குணபரன் என்றும் குணதரன் என்றும் சிறப்புப் பெயர் படைத்த மகேந்திரவர்மனும் ஜைன சமயத்தவனாக இருந்தான் என்று அறிகிறோம். தொண்டை நாட்டிலே பாடலிநகரத்தில் (திருப்பாதிரிப் புலியூரில்) அந்தக் காலத்தில் பேர் போன திகம்பர ஜைனமடம் இருந்தது. அந்த ஜைனமடத்தில் சிம்ம சூரி என்னும் ஜைனப்பெரியார் இருந்து லோகலிபாகம் என்னும் பெயருள்ள ஜைன மத நூலைச் சமஸ்கிருத பாஷையில் மொழி பெயர்த்தார் என்று அறிகிறோம். பாணராஷ்டிரத்தில் (தொண்டைநாட்டில்) பாடலி நகரத்தில் இருந்தபோது சகர ஆண்டு 380-ல் (கி.பி. 4598-ல்) சிம்மவர்மன் என்றும் அரசனுடைய 22-ம் ஆட்சியாண்டில் இந்த நூலை அவர் பெயர்த் தெழுதினார்.[1] இந்த ஜைனமடத்திலே கி.பி.7-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மருள்நீக்கியார் என்பவர் (பிற்காலத்தில் திருதாவுக்கரசர்) தருமசேனர் என்றும் பெயர்பெற்று மடத்தலைவராக இருந்தார்.[2]

தேவசேனர் என்றும் ஜைன சமய ஆசாரியர், விக்கிரம சம்வத்ரம் 909-ல் (கி.பி.853-ல்) திகம்பரதர்சனம் என்னும் நூலை எழுதினார். அந்த நூலில் அவர், பாண்டி நாட்டில் வச்சிரநந்தி ஆசாரியர் திரமிள (திராவிட - தமிழ்) சங்கத்தை நிறுவினதாக எழுதியுள்ளார். பூஜ்ஜிய பாதர் என்றும் தேவ நந்தி ஆசாரியரின் மாணாக்கர்களில் வச்சிர நந்தி ஆசாரியரும் ஒருவர். வச்சிர நந்தி விக்கிரம் ஆண்டு 525-ல் (கி.பி. 170ல்) தக்கிண மதுரையில் (பாண்டி நாட்டு மதுரையில்) திரமிள சங்கத்தை நிறுவினார். இந்தக் காலம் மதுரையில் களப்பிர அரசர் ஆட்சிசெய்த காலம். களப்பிரர் ஜைனமதத்தை ஆதரித்தவராகையால் அவர்கள் காலத்தில் வச்சிரநந்தி திராவிடசங்கத்தை (ஜைன முனிவர்களின் திராவிட சங்கத்தை) நிறுவினார். ஏற்கனவே பாண்டி தாட்டில் வேர் ஊன்றி நிலைத்திருந்த சமண சமயம், ஜைனத் துறவிகளைக் கொண்ட திராவிட சங்கத்தை வச்சிர நந்தி மதுரையில் நிறுவினபோது, மேன்மேலும் தழைத்து வளர்வதற்குக் காரணமாக இருந்தது. சமண சமயத்தை வளர்ப்பதற்காக வச்சிர நந்தி அமைத்த திரமிள சங்கத்தையும் சங்ககாலத்தில் பாண்டியர் தமிழ் மொழியை வளர்க்க அமைத்த தமிழ்ச் சங்கத்தையும் ஒன்று என்று கருதுவது தவறு. இந்த இரண்டு சங்கங்களும் வெவ்வேறு காலத்தில் வெவ்வேறு காரணத்துக்காக அமைக்கப்பட்ட சங்கங்கள். இரண்டையும் ஒன்றாக இணைத்துக் கூறுவது வரலாறு அறியாதவரின் தவறான கூற்றாகும். (இணைப்பு 2 காண்க)

பௌத்த சமய வளர்ச்சி

பௌத்தமதம் கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் அசோக சக்கரவர்த்தியின்


  1. Mysore Armacological Report for the year 1909-10
  2. திருநாவுக்கரசு நாயனார் புராணம் 38, 39, 40