பக்கம்:களப்பிரர் ஆட்சியில் தமிழகம்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

63

களப்பிரர் ஆட்சியில் தமிழகம்

சிம்மவக்தரம் என்னும் ஊரில் இவர் பிறந்தார். சிம்மவக்தரம் என்பது சீயமங்கலம் என்றும் ஊராக இருக்கலாம் என்று தோன்றுகிறது. (சிம்மம் - சிங்கம் - சீயம்) சீயமங்கலம் செங்கற்பட்டு மாவட்டம் காஞ்சிபுரம் தாலுகாவில் உள்ளது. இவ்வூரில் பிராமண குலத்தில் பிறந்தவராகிய இவர் வைதிக நூல்களைக் கற்றுப் பிறகு காஞ்சிபுரத்தில் பௌத்த நூல்களைக் சுற்றுப் பௌத்தப் பிக்கு ஆனார். பிறகு வடஇந்தியாவுக்குப் போய் அங்குப் பேர் போன வசுபந்து என்னும் பௌத்த ஆசிரியரிடத்தில் மகாயான பௌத்த நூல்களைக்கற்றுத் தேர்ந்தார். பின்னர் நளாந்தா பல்கலைக் கழகத்துக்குச் சென்று பல நாள் தங்கி அங்குப் பல நூல்களைக் கற்றார். இவருடைய மாணவர்களில் காஞ்சிபுரத்திலிருந்த தருமபால ஆசாரியரும் ஒருவர்.

ஆசாரிய திக்தாகர் தர்க்க நூல்களை தன்கு கற்றவர். நியாயப் பிரவேசம், நியாயத்துவாரம் என்னும் இரண்டு தர்க்க நூல்களை இவர் வடமொழியில் எழுதினார். இவர், பௌத்த மதத்தில் விஞ்ஞானவாதப் பிரிவை உண்டாக்கினார் என்பர். வசுபந்து கி.பி.420 முதல் 500 வரையில் வாழ்ந்திருந்தார் என்று கூறப்படுகிறபடியால் அவரிடம் பயின்ற இவரும் கி.பி.5-ம் நூற்றாண்டில் வாழ்ந்தவராதல் வேண்டும். இவர், பற்பல நாடுகளுக்குச் சென்று பலரோடு தர்க்கவாதம் செய்து மீண்டும் காஞ்சிபுரத்துக்கு வந்தார் என்பர். காஞ்சிபுரத்துக்கு வருவதற்கு முன்பே ஒருயா நாட்டில் காலமானார் என்று சிலர் கூறுவர்.[1]

போதிதருமர்

இவர் காஞ்சிபுரத்தை யரசாண்ட ஓர் அரசனுடைய மகன். இவர் பௌத்தமதத்தைச் சேர்ந்த பௌத்தப்பிக்கு ஆனார்; பௌத்த மதத்தில் தியானமார்க்கம் என்னும் பிரிவைச் சேர்ந்தவர். கி.பி.520-ல் இவர் சீனநாட்டுக் காட்டன் பட்டினம் போய்ச் சேர்ந்தார். கி.பி.525-ல் சீனதேசத்துக்குப் போனார் என்று சிலர் கூறுவர். சீன நாட்டிலும் ஐப்பான் தேசத்திலும் இவர் தம்முடைய பெனத்தக் கொள்கையைப் பரப்பினார். இவர் போதித்த பௌத்தக் கொள்கையைச் சீனர் சா'ன் மதம் என்பர் ஜப்பானியர் ஜென்மதம் என்பர், போதிதருமரைச் சீனர் தமக்குரிய இருபத்தெட்டுச் சமய குரவர்களில் ஒருவராகப் போற்றுகிறார்கள். ஜப்பான் தேசத்திலும் சீனதேசத்திலும் இவருடைய நினைவாகக் கோயில்கள் உண்டு.[2]

காஞ்சி தருமபால ஆசாரியர்

இவர் காஞ்சிபுரத்தில் பிறந்து வாழ்ந்தவர். காஞ்சிபுரத்து அரசனுடைய அமைச்சராக இருந்த ஒருவரின் மகன். பெற்றோர் இவருக்குக் திருமணஞ்செய்யத் தொடங்கினபோது இவர் திருமணத்துக்கு உடன்படாமல் பௌத்த மதத்தைச் சேர்த்து பௌத்தத் துறவியானார். பல நாடுகளுக்குச் சென்று தம்முடைய கல்வியை வளர்த்துக் கொண்டார்.


  1. பொத்தமும் தமிழும் என்னும் நூலின் தமிழ் நாட்டுப் பொத்தப் பெரியார் என்றும் தலைப்புக் காண்க
  2. Ibid