பக்கம்:களப்பிரர் ஆட்சியில் தமிழகம்.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

5

களப்பிரர் ஆட்சியில் தமிழகம்

மேலும் புதைபொருள் சான்றுகள், பழங்காலச் சான்றுகள் கிடைக்குமானால் களப்பிரர் வரலாற்றில் பகற்காலத்தைக் காணக்கூடும்.

வாழ்க்கையில் ஏற்பட்ட மனக்கவலையும் துன்பமும் நோயும் தொடர்ந்து வருத்துகிற காலத்தில் இந்நூலை எழுதினேன்.

இந்நூல் வெளிவர முழு முயற்சிகள் எடுத்துக் கொண்ட சென்ளைப் பல்கலைக் கழகத் தொல்பொருள்துறை ஆய்வு மாணவர் திரு. ர. ராமசாமி அவர்களுக்கு என் நன்றி உரியதாகும்.

இந்த நூல் அச்சிட்டு வெளிவிடும் மக்கள் வெளியீடு நிறுவனத்தைச் சேர்ந்த திரு மே. து.ராசுகுமார் அவர்களுக்கு என்னுடைய நன்றியைத் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன்.

மயிலாப்பூர்
சென்னை -4

மயிலை சீனி வேங்கடசாமி
20-10-1975