பக்கம்:களப்பிரர் ஆட்சியில் தமிழகம்.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மயிலை சீனி வேங்கடசாமி

78

தொடக்கமும் அதன் முதற்காண்டமும் இறுதிக்காண்டமும் இப்போது கிடைக்க வில்லை. வெற்றைத் தவிர மற்ற பகுதிகள் எல்லாம் கிடைத்துள்ளன. இந்த நூலில் திரி சொற்கள் அதிகம். சற்றுக் கடினமான நடைதான். மணிமேகலை காவியம் போலவே பெருங்கதையின் செய்யுட்கள் ஆசிரியப் பாவாலானவை. இப்பாக்களின் இறுதியில் மணி மேகலை காவியம் போன்றே 'என்' என்று முடிகின்றன. இந்த நூலைக் கொங்குவேள் களப்பிரர் ஆட்சிக்காலத்தில் இயற்றியிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

கி.பி. எட்டாம் நூற்றாண்டில் இருந்த திருமங்கையாழ்வார் பெருங்கதையைப் படித்திருக்கிறார் என்பது அவருடைய சிறிய திருமடல் என்னும் செய்யுளில் பெருங்கதையின் தலைவியாகிய வாசவதத்தையைப் பற்றிக் கூறுவதிலிருந்து அறிகிறோம்.

ஆராலும் ஆதாலும் அல்லன் அவள் காணீர் வாரார் வனமுலை வாசவ தத்தை என்று
ஆராலும் சொல்லப் படுவாள்-அவளுந்தன்
பேராயம் எல்லாம் ஒழியப் பெருந்தெருவே
தாரார் தடத்தோள் தனைக்காவன் பின்போனாள் ஊரார் இகழ்ந்திடப் பட்டாளே[1]

கி.பி 2-ம் நூற்றாண்டின் இறுதியில் எழுதப்பட்ட மணிமேகலை காவியத்தில் பெருங்கதையின் குறிப்புக் காணப்படுகிறது.[2] அக்காலத்திலேயே பெருங்கதையைத் தமிழர் அறிந்திருந்தனர் என்பது தெரிகிறது. ஆனால் அவர்கள் காலத்தில் கொங்குவேளின் பெருங்கதை எழுதப்படவில்லை. வேறுயாரோ எழுதிய பெருங்கதையை அவர்கள் அறிந்திருந்தனர்.

பெருங்கதையின் மூல நூல் பிருஹத்கதை என்பது (பிருஹத் கதை - பெருங்கதை) பிருஹத்கதையை குணாட்டியர் என்னும் புலவர் பைசாச பாஷையில் எழுதினார். குணாட்டியர், தக்கண தேசத்தை அரசாண்ட சாதவாகன அரசனுடைய அமைச்சராக இருந்தவர். சாதவாகன அரசர்களுக்குச் சதகர்ணி என்றும் பெயர் உண்டு. சாதவாகன அரசர்களாகிய சதகாணியசரைத் தமிழர் நூற்றுவர்கன்னர் என்று கூறினார்கள். ஏறத்தாழக் கி.பி. முதல் நூற்றாண்டில் குணாட்டியர் என்னும் அமைச்சர் பிருஹத்கதையைப் பைசாச பாஷையில் எழுதினார். இது விந்திய மலைப் பிரதேசத்தில் பேசப்பட்ட மொழி ஆகும். பைசாச பாஷை திராவிட இனத்தைச் சேர்ந்த மொழி என்பர். பைசாச பாஷை என்பது பிராகிருத பாஷையைச் சேர்த்தது. பிருஹத்கதையின் பெரும் பாகம் அழிந்துபோயிற்று. எஞ்சி இருக்கும் பகுதியே இப்போதுள்ள பெருங்கதை.

பிருகத் கதையை தமிழில் எழுதியவர் கொங்குவேள் என்னும் சைனர். சைவர்கள் பிராகிருத பாஷைகளைக் கற்றவர்கள். எப்படி என்றால்


  1. திருமங்கையாழ்வார், சிறுத்திருமடல்
  2. மணிமேகலை 15: 68-66