பக்கம்:களப்பிரர் ஆட்சியில் தமிழகம்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

89 களப்பிரர் ஆட்சியில் தமிழகம்

சிராமலையில் இருந்த சிவபெருமானைக் கபிலதேவ நாயனார் கூறினார்.[1] இதில், மகேந்திரவர்மன் அமைத்த குகைக்கோவிலைத்தான் இவர் கூறுகிறார் என்று கருதவேண்டியதில்லை. அதற்கு முன்பு அம்மலைமேல் இருந்த சிவன் கோயிலைக் குறிப்பதாகக் கொள்ளலாம். ஆகவே கபிலதேவ நாயனாரும், இன்னா நாற்பது கபிலரும் வெவ்வேறு கபிலர்கள் என்று கருதுவது வேண்டா. இருவரும் ஒருவரே என்பது எம்முடைய கருத்து.

இனியவை நாற்பது

இந்த நூலை இயற்றியவர் பெயர் மதுரைத் தமிழாசிரியர் மகனார் பூதஞ்சேந்தனார். இது நாற்பது வெண்பாக்களையும் ஒரு கடவுள் வாழ்த்தையும் உடையது. மாந்தர் செய்ய வேண்டிய இனிய (நல்ல) செயல்களைக் கூறுகிறது இந்நூல். இதன் கடவுள் வாழ்த்து இது:

கண்மூன்றுடையான் தாள்சேர்தல் கடிதினிதே
தொன்மாண் துழாய்மாலை யானைத் தொழலினிதே முந்துறப் பேணி முகதான் குடையானைச்
சென்றமர்ந் தேத்தல் இனிது

திரிகடுகம்

இது நூறு வெண்பாக்களையும் ஒரு கடவுள் வாழ்த்தையும் உடைய நூல். சுக்கு மிளகு திப்பிலி என்னும் மூன்று மருத்துச் சரக்குகளைத் தனித்தனியே பொடி செய்து, இப்பொடிகளைச் சம அளவாகச் சேர்த்து அமைக்கப்பட்ட மருந்து திரிகடுகம் என்பது. இதைத் திரிகடுகு சூரணம் என்றும் கூறுவர். இது காரமாக இருக்கும். இதனால் இது திரிகடுகம் (மூன்று காரமான பொருள்) என்று பெயர் பெற்றது. இதை நாள்தோறும் காலையில் சிறு அளவாக உட்கொண்டால் உடல் நோயை நீக்கி நலம் உண்டாக்கும். திரிகடுகமாகிய சுக்கு மிளகு திப்பிலியைச் சமனளவாகச் சிதைத்து நீர்விட்டுக் காய்ச்சிய கியாழத்தையும் உட்கொள்ளலாம். திரிகடுகக் கியாழமும் சூரணமும் உடல் நோயைப் போக்குவது போல, திரிகடுகம் என்னும் இந்நூவைப் படிப்பவரின் உள்ள தோய் (மனநோய்) நீங்கும் என்னும் கருத்தினால் இந்நூல் திரிகடுகம் என்று பெயர் பெற்றது. ஒவ்வொரு செய்யுளிலும் மும்மூன்று கருத்துகள் கூறப்படுகின்றன. இதன் கடவுள் வாழ்த்துச் செய்யுள் இது:

கண்ணகன் ஞாலம் அனத்ததூஉம் காமருசீர்த்
தண்ணறும் பூங்குருத்தம் சாய்த்ததுஉம் - தண்ணிய மாயச் சகடம் உதைத்த தூஉம் இம்மூன்றும்
பூவைப் பூவண்ணன் அடி


  1. சிவபெருமான் திருவந்தாதி செய்யுள் 42