பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8



"அப்படீங்களா? பலே!... பலே!’ - மாணிக்கம் பச்சைப் பிள்ளை மாதிரி தாவிக் குதித்தான். சவாலில் கெலித்த களி துள்ளியது.

நீங்க சொன்ன இனிப்புச் சேதியைக் கேட்டடி யும், என்னேடு மேனி முச்சூடுமே ஒரே முட்டாய் இனிச்சுதுங்க!' என்ருன். தலைமுண்டாசுத் துவாலை தோளுக்குச் சரிந்தது. பெருமிதம் பூத்த பரவசத் தோடு தலையை நிமிர்த்தினன் மாணிக்கம்.

அப்படியா? ரொம்ப மகிழ்ச்சி, மாணிக்கம்,' என்று புன்னகை செய்தான் வீரமணி. அரும்பு மீசையை முறுக்கி விட்டான்; கைப் பையைக் கை மாற்றிக் கொண்டான். -

- நண்பர்கள் தேடி வந்தனர்.

பட்டப் படிப்புத் தேர்வில் வீரமணி வெற்றி வாகை சூடிய அமுதச் செய்தி அஞ்சல் செய்யப் பட்டது. -

எங்க வீரமணி அண்ணன் இனிமே பட்டதாரி விவசாயி-விவசாயப் பட்டதாரி!... ஆகா!'முத்து கைகொட்டிக் களித்தான். -

கைலாசம் கும்மாளம் போட்டான். தோழர்கள் குதுகலம் அடைந்தார்கள். அன்பு பெருக, பாசம் உருக நின்ருன் வீரமணி. இனி, அவன் வீட்டுக்குப் புறப்பட்டாக வேண்டும். அப்பா அங்கே எதிர்நோக்கித் தவித்துக் கொண் டிருப்பார்!