பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

99

99

அப்பா!' என்று பிள்ளைப் பாசத்தின் கட்டுப்பாட் டுடன் தெரிவித்தான் வீரமணி.

கொட்டி முழக்கத் தேவருக்கு யாரும் சொல் லிக் கொடுக்க வேண்டியதில்லை. ரைட்டு!... நான் போயிட்டு வரட்டுமா?' என்ருர்,

'போயிட்டு வாங்க, அப்பா!'

தஈர்க் குச்சியும் மூக்குக் கயிறும் கைலாகு கொடுத்துக் கொண்டன.

தேவர் இளம் சிங்கமென திமிர்ந்தார். செவலை யின் வாலைச் சுண்டிவிட்டார். வண்டி திட்டி வாசலைத் தாண்டப் பிரயத்தனம் செய்தபோது, யாரோ எதிர்ப்புறம் விரைந்து வருவதைக் கண்ட தும், பிடிகயிற்றை லாவகமாக இடித்துப் பிடித்துக் கொண்டு மாட்டை அதட்டி நிறுத்தினர்.

வந்தவன் ஊராட்சி மன்றச் சேவகன், அவசரக் கோலம் அள்ளித் தெளித்த போக்கில், தலையின் வேடுகட்டிச் சுற்றியிருந்த கிழிசலை அவிழ்த்துக் கட்கத்தில் திணித்துக் கொண்டான் அவன். தேவருக்குக் கும்பிடு கொடுத்தான். “தலைவர் ஐயா கண்டுக்கிட்டு வரச் சொன்னுரு. நீங்க இருந்தா, வெளியே தெருவே போகாது கொஞ்ச நாழி வீட் டோடவே இருந்தால் தேவலாம்னு தயவாய்ச் சொல்லச் சொன் இங்க உங்ககிட்டே. என்னமோ பேச்சு இருக்குதாம். நான் திரும்பினடியும், அவரு இங்கே வந்து விழுந்திடுவாருங்க ஐயா!' என்று அறிவிப்புக் கொடுத்தான்.