பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

101

I {} |

ஊராட்சித் தலைவர் வருகை தரும் விவரம் அறிந்ததும், மாட்டுக்காரச் சிறுவன் வேலனைக் கூப்பிட்டு, வெளித் திண்ணையைக் கூட்டி, குப்பை யைக் கழிக்கும்படி பணித்தான் வீரமணி. பீரோ விலிருந்த ரத்தினக் கம்பளத்தை எடுத்து வந்து விரித்தான். வேலன் கொணர்ந்த தண்ணிர்ச் செம் பையும் வெற்றிலேத் தட்டையும் இடம் கணித்து வைத்தான். தமிழ்ப் பண்பாட்டில் விளைந்திட்ட இத்தகைய சம்பிரதாயங்கள் பகுத்தறியும் அவன் சிந்தைக்கு இதமளித்திருக்கக் கூடும்.

தேவரின் புருவங்கள் எகிறி உயர்ந்தன.

உலக அரசியலிலே வெறும் வாய்க்கு அசை போட உதவுவது கூட்டுச் சேரும்-அல்லது கூட்டுக் சேராக் கொள்கை வியவகாரம்,

ஆனல், இப்போது கூட்டுச் சேர்ந்த கதம்பச் சிரிப்பின் கனத்த அலைகள் ஆர்ப்பரித்து ஓடிவந்து கொண்டிருக்கின்றன. - -

  • வாங்க, வாங்க, எல்லாரும் வாங்க!” என்று மலர்ச்சியுடன் கை குவித்துக் கையேந்தி வர வேற்ருர் ஆதிமூலத் தேவர். கறுத்த நெற்றியின் விபூதிக் கோடுகளுக்கும் அடியில் அம்பாள் குங்குமம் எடுப்பாகக் கண் சிமிட்டியது. “பொதுக் காரியம் ஏதாச்சும் காத்திருக்கும்'-எண்ணினர்.

ஊராட்சித் தலைவர் மட்டும் வரவில்லை. கட்

மாட, ஊர்க் கட்சிகளின் நீறுபூத்த பூசல்களைக்

கடந்த பிரதிநிதிகளாக கந்தையாச் சேர்வை, காளி

காநி - 7