பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102

} {} 3

முத்துச் செட்டியார், காமராசன், மதிவாணன்,

தலைமை ஆசிரியர் தங்கராஜ், டாக்டர் பாஸ்கள்

ஆகியோரும் வந்தார்கள்.

வீரமணியும் முகமன் உரைத்தான்.

வந்தவர்கள் அவரவர் பங்குக்குப் பெரியவருக்கு ஆனக்கம் தெரிவித்த வண்ணம், திண்ணையில் அமர்ந்தார்கள்.

கூனிக் குறுகி உட்கார்ந்திருந்த மதிவாணனக் கண்டதும், வீரமணிக்கு என்னவோ போலிருந்தது. இரண்டு மாதங்களுக்கு முன், கொள்கை அடிப்படை யில் கருத்து மாறுபாடு கொண்டு பகைமை பூண்ட அவன், இப்போது வீடு தேடி வந்திருக்கிருன். உபசரிக்க வேண்டியதுதான், கண்ணியம். 'சம் மணம் கோலி விசாலமாய்க் குந்திக்கங்க, என்ருன். பட்டப் பரிட்சை எழுதி லீவுக்கு வந்திருந்தபோது, தான் ஒரு மேடையிலும் அவன் எதிர் மேடையிலு மாக ஏறிக் கொள்கை முழக்கம் செய்த நிகழ்ச்சி களே ஊர் மறுப்பதற்கில்லே; மறப்பதற்கில்லை. மதி வாணன் முடிகளைச் சீராக ஒதுக்கிக் கொண்டான், ஹிப்பி நாகரிகம் இந்தப் பட்டிக்காட்டு மண்ணே யாவது தொற்ருமல் விட்டிருக்கலாகாதா? என்ன விட்டகுறையோ? - எங்கே தொட்ட குறையோ?

"மேய்ச்சல் ஒய்ஞ்ச நேரம்,ை சுடு தண்ணி போட் டிருப்பான் காசி. இப்ப ரெண்டுங்கெட்ட சமயம். தாகத்துக்குச் சாப்பிட்டுட்டு எல்லாரும் வெற்றிலே பாக்குப் போட்டுகிடுங்க" என்று உபசரித்தார் பெரியவர்.