பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104

lo) 4

இதையெல்லாம் எட்டித் தள்ளிப்பிட்டு, நான்டோம் புதுப் பணக்காரன் ராமையாவை - புது ரோசக் காரன் ராமையாவை அழைச்சிட்டு வர்றேனுங்க!" என்று சொல்லிவிட்டுத் தயங்கி நடந்து, பின் நடை யில் விரைவு பாய்ச்சி நடந்தார் ஆதிமூலம்.

வழக்குக்கு விரோதமாகக் கோயில் கொண் டிருப்பார் சனீஸ்வர பகவான். அதே பாவனையில், சிலையாக நின்ருர் ராமையா. அவர் முகம் சனி மூலையில் வக்கிரமாகத் திசை மறுகித் திரும்பி யிருந்தது. *

'ஏ, ராமையா! வா, என் மண்ணுக்கு!” என்று அழைத்தார் பெரியவர். பற்றறுத்த துறவுப் பண்புகூட அவருக்கு ஆகிவந்த கலையோ?

ராமையா முகம் கொடுத்தால்தானே? - மூச்சுக் காட்டினுல் தானே? - மூச்...!

ஆதிமூலம் கொந்தளித்த ஆத்திரத்துக்கு அணைகல் போட்டுக் கொண்டே, வாய் எச்சிலைக் காறி உமிழ்ந்து விட்டுத் திரும்பினர். 'பஞ்சநதம்! ராமையா மூஞ்சியைக் கூட திருப்பல்லேங்க. அவன். ரோசம் ஊருக்குத் தெரியாதாக்கும்? ஊம்...என் பாடு விட்டிச்சு. சரி, சரி, வந்த காரியத்தைச் சொல்லுங்க,” என்று தூண்டில் போட்டார் முதிய நாட்டாண்மைக்காரர். *

“பெரியவுக கொஞ்சம் பொறுமையாய் இருக்க வேணும். நம்ம ஆவணத்தாங் கோட்டைக்கு உயர் நிலைப் பள்ளியும் மருத்துவ மனையும் வாரத்துக்கு