பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9



“வாங்க, அண்ணு; ஆளுக்கொரு தேத்தண்ணி ஊத்திக்கிட்டுப் பறியலாம்,' என்று மாணிக்கம் வேண்டிக் கொண்டான்.

'ஆாம்!'

அடடே கொம்பிலே வைக்கோலக் கட்டிக் கொண்டு மாடு ஒன்று ஒடுகிறதே? மேயவா?... அளகூம்!-நீராடி! - t

சாலை அத்தளிப்பட்டது. நட்பு முன் தொடர, நட்பு பின் தொடர்ந்தது.

கை வீசி நடந்தான் வீரமணி. ஊராட்சி மன்றம் அவனுக்கு வழி விட்ட நேரத்தில், அவனே உரசிக் கொண்டு அவனுடைய தாய் மாமன் ராமை யாத் தேவர் வடக்கே காடு மேடு தெரியாமல், கண் மண் புரியாமல், ரேக்ளாவில் பறந்த காட்சியைக் கண்டதும், அவனுக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. அவன் எதை நினைப்பான்? அல்லது, எதை மறப்பான்? என்னென்னவோ எண்ணங்கள் உப்புக் கோடு மறித்தன. தன் வசம் இழந்து, மின் விளக் குக் கம்பத்தின் அருகில் அப்படியே நின்றுவிட்டான். அப்போது எதிர்ப்புறத்திலிருந்து நண்பர்களின் அழைப்புக் குரல் கேட்கவே, அவன் சுய நினைவை யும் நல்ல நிதானத்தையும் துணை சேர்த்துக் கொண்டு, சாலையைத் துண்டாடிப் பாய்ந்தான்: அவன் போட்டிருந்த டெரின் ஸ்லாக்' வெகு எடுப் பாக விளங்கியது.