பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108

I () &

'எனக்குத் தலைக்கு மேலே சோவி இருக்கு: சுருக்கண பேச வேண்டியதைப் பேசிஞல் தேவ லாம்,' என்று குதிகாலில் வெந்நீரை ஊற்றிக் கொண்டு அவசரப்பட்டார் ராமையா.

ராமையாவின் தலைக்கு மேலே எந்தச் சோவி யும் காணப்படாததைக் கண்டு, தனக்குத் தானே நகைத்துக் கொள்ளவும் பெரியவர் தவறி விட வில்லை.

தலைவர் அம்பலம் சுறுசுறுப்புப் பெற்ருர். ஒரு நோட்டை எடுத்து வைத்தார். "நான் சொன்ன ஊர்ப் பொதுக் காரியங்களுக்காக, இதிலே கண்ட பத்துபேர் கொண்ட ஒரு குழு அமைச்சிருக்கோம். இந்தக் குழுதான் உயர்நிலைப் பள்ளி, மருத்துவமனை சம்பந்தமாக கட்டிடம் முதலான செலவுகளுக்கான அன்பளிப்புத் தொகைகளை வசூலிக்க அதிகார :ர்வமான அதிகாரம் கொண்டது. அவங்க அவங்க பேருக்கு அடியிலே, முதலிலே கையொப்பம் செஞ் சிடுங்க” என்று விளக்கலாஞர். * .

கையொப்பங்கள் பூர்த்தி பெற்றன.

மீண்டும் தொடர்ந்தார் பஞ்சநாதம்:

நான் குறிப்பிட்ட ரெண்டு பெரிய காரியங் களுக்கும் குறைந்த பட்சம் இருபத்தையாயிரமாகி லும் நம் ஊர்ப்பங்குக்குத் தேவைப்படும். முதலிலே, நம்பளுக்குள்ளாற, அவங்க அவங்க மனசுப்படி, இந்த நோட்டிலே இனம் தொகைகளைக் குறிச்சிடு வோம். பிறகு, குடிக்கணக்கு வீதப்படி வசூல்