பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

113

1 : 3

மாகவும் சிரித்த அந்த நிட்டுரப் புதிர்ச் சிரிப்பின் அலைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விடுகதை போட்ட வண்ணம், தன்னுடைய நெஞ்சிலும் நினைவிலும் இன்னமும் எதிரொலித்துக் கொண்டே யிருந்த விந்தையை அவன் இப்போதும் மறக்க வில்லை; எப்போதும் மறக்கவும் மாட்டான்; மறக்கக்கூடிய சிரிப்பன்று அது. ஒரு வேளை, மறக்கக் கூடாதென்றுதான் அப்படிச் சிரித்திருப்பாரோ அப்பா......?

அந்தி மாலை அந்தம் காட்டிச் சந்தம் கூட்டிக் கிளிக்கண்ணி பாடிக் கொண்டிருக்கிறது. மாலையின் மணமும், பாட்டின் நயமும் கூடிவரக் கேட்க வேண் டியதில்லை.

சிலையாக மலைத்துவிட்ட அருமைத் திருக்குமாரனைக் கண்டவுடன் பெரியவரின் தந்துை. உள்ளம் நெகிழ்ச்சி அடைந்திருக்க வேண்டும். கீழ் வெளித்திண்ணையில் அமைக்கப்பட்டிருந்த சிமிட் டித்திண்டில் சாய்ந்திருந்த அவர், மெல்ல மெல்ல. மூச்சைக்கூட்டி மெள்ள மெள்ள எழும்பி உட்கார்ந் தார். குடுமி அவிழ்ந்தது. அவிழ்ந்தவாக்கில் தான் காட்சியளித்துக் கொண்டிருந்தது. அன்பு மகனே ஆதரவோடு பார்வையிட்டார் அவர் என்ன நினைத்தாரோ?- குடுமியைக் கோதி முடிந்து கொண்டார். 'தம்பி, வீரமணி!' என்று பரிவுடன் கூப்பிட்டார். - -

அவ்வளவு தான் !

மறுகணம்: