பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114

i 14

மெளனத் திரை விலகியது.

ஏறிட்டு விழித்தான் வீரமணி. அப்பா தலையை முடிந்து கொண்டு விட்டார்!- பரவாயில்லை! குற்ற வாளியான அம்மான் ராமையாத் தேவரைத் திரும்பவும் குற்றவாளியாக்கி விட்டு, உடனே கைக்கு மெய்யாக, அவிழ்ந்த குடுமியும், அவிழாத வெஞ்சினமுமாகத் தன் தந்தை பயங்கரமாகச் சிரித்தபோழ்தில், பாரதப்பாஞ்சாலி, முடிக்காத கூந்தலோடு தருமத்தின் பேரால் சபதம் முழக்கிய கதை அவனது இதயத்தைத் தொட்டு நின்ற காட்சியை இப்போதும் நினைவு கூர்ந்தான். அப்பாவின் வைரநெஞ்சம் ஊர் அறியாததா? அப்பா அழைத்தாரே! அப்பா என்ருன் வீரமணி. அவன் மெளனம் தற்சமயம் புதிர் ஏதும் போட வில்லை. அதற்கு ஏதும் இல்லையோ?

பாசத்தைச் சந்தித்தது பாசம்.

அச்சந்திப்பில், பூவின் மணம் இருந்தது: விலங்கின் இறுக்கம் இருந்தது.

அப்படியென்ருல்?...

பாசம் ஒரு பூவிலங்குதானே?...

தேவர் மார்பைப் பிசைந்து விட்டிார். குலக் கொழுந்தை என்னவோ ஒர் உட்குறிப்புடன் ஊடுரு விஞர். "வீரமணி, சத்த முன்னடி நான் உன்னேட அம்மான் மேலே குற்றப்பத்திரிகை வாசிச்சேனே, அந்தச் சங்கதி உன்னுேட மனசான மனசுக்கு