பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

115

I i 5

ஒப்பலையாங்காட்டியும்? அதனலேதான், என் பேச்சை மதிக்காதவன் கணக்கிலே, பிடிச்சு வச்ச மெளனப்பிண்டமாய்க் குந்திக்கிட்டே இருந்தியாக் கும்? ஊம், இப்பவானும் பதில் பேசு!" என்று ஆணையிடலாஞர்.

வீரமணி அதிர்ச்சியடையாமல் தப்ப முடிய வில்லை. பெற்றவரின் ஆணே அவனே எண்ணுத எண்ணமெல்லாம் எண்ணச் செய்து விட்டது. அப்பாவோட பாசம் பூவாக மணக்கிறதை விட்டுப்புட்டு, விலங்காக - கைவிலங்காக மாறி, என்னைக் கட்டிப்போடப் பார்க்குதா? என்னை என்ருல், என் கைகளை மட்டிலுமா? இல்லை. என் மனசையும் சேர்த்துக் கட்டிப் போட முனைஞ்சி ருக்குதா? அதனலே தான், தொட்டதுக்கெல்லாம் தூண்டித் துருவித் துளைச்செடுக்கிருரா? எடுத்ததுக் கெல்லாம் சட்டம் போட்டு மாட்டுகிருரா அப்பா? பொட்டுப் பொழுதுக்கு அவன் சிந்தனை வசப்பட் டான்; விழித்த சிந்தனையில் தன் மானம் விழித்தது. கால்விரல் மிஞ்சிகள் கொஞ்ச சதங்கை முத்தங்கள் முத்தமிட்டுக் கெஞ்ச, அன்னமென வந்தாள். அன்னம்; அன்னம் மின்னலென வந்தாள். அன் னம்! ...அம்மான் மகளே!-பூஞ்சிரிப்பு; பூச்சிவிர்ப்பு: சுயப்பிரக்ஞை நரம்பு மீட்டியது. அடடே!. அப்பாவுக்கு இம்முறையும் விடை சொல்லா விட்டால், விசுவாமித்திரராகிவிடப் போகிருர், பாவம்!-"அப்பா!' என்று கண்டாமணிக் குரல் கொடுத்து வைத்தான் முதலில். பேச்சுக்கு அச்சாரம் அது .