பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10

* {}

எங்கிருந்தோ சிரிப்பொலி இளங்காற்றில் மிதந்து வந்து கொண்டிருக்கிறது:

வீரமணி திரும்பிப் பார்த்தான்.

கங்காணியர் தென்னந்தோப்புக் கேணியடியிலி ருந்து ஐந்தாறு பெண்கள், தண்ணிர்க் குடம் சல. சலக்க, சாந்துப் பொட்டு தளதளக்க வந்து கொண் டிருந்தார்கள்.

கூர்த்த மதி பதித்தான் வீரமணி. இருட்டைக் கீறிக் காட்டும் கொடி மின்னலென, கன்னியர் கூட்டத்தின் மத்தியிலே, அந்த முகம்’ பளிச்சிட்டுப் பள பளத்தது!

வீரமணியின் செவ்வதரங்களிலே நளினமான குறுஞ்சிரிப்பு நெளிந்தது. நெஞ்சிலும் நினைவிலும் நீக்கமற நிறைந்திருக்கும் ஆசை முகம் ஆயிற்றே அது!..."ஓ! அம்மான் மகள் அன்னக்கொடி!-- எண்ணிய மனம் பூச்சிதறலாக மணத்தது; பூந் தென்றவென இனித்தது.

- அன்னக்கொடி நோக்கிளுள்.

வீரமணியும் நோக்கினன்,

அவள் என்னவோ சொல்லத் துடித்திருக்க வேண்டும்.

அவனும் என்னவோ பேசத் தவித்திருக்க வேண்டும்.

ஆளுல், வாய்ச் சொற்கள் இரு தரப்பினின்றும் பிறந்தால் தானே?