பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120

120

அப்பாரே!' என்று அடக்கம் காத்துச் சமாதானம் சொன்னன் தேவர் பாலன்.

கூடிவந்த இந்தப் பொன்னை வாய்ப்பினைக் கூட்டி வைத்து, பொன்னை வாயைப் பூப்போலத் திறந்து பூச்சிரிப்பை உதிர்த்தால் என்ன?-பெரிய வரின் வாய்முத்து உதிர்ந்து விடுமா, என்ன? -சிறு பொழுதைக் கழித்துவிட்டு, மறுபடி பேச்செடுத் தார்.

'நான் உன்னுேட அருமை அம்மான்கார்னே நியாயத்தோட ஏசினது உன்மனசுக்கும் நியாயம்னு பட்டிருந்தால், பொட்டுக் கட்டின தா ட் ட ம் பட்டுண்னு ஆமாங்க, நீங்க செப்புறது சரிதான். ராமையதேவர் தப்பிலி என்கிறதுதான் நமக்கு. வெட்ட வெளிச்சமாச்சுங்களோ, அ ப் பா’ அப்படின்னு வாயைப் திறந்து நீ இணக்கமாய்ப் பேசியிருந்தால், உன்னுேட வாய்முத்தா சிந்திப் பூடும்? இல்லே, கேட்கிறேன்! ஊம்; இப்பைக்கு என்னமோ...நொண்டிக் குதிரைக்குச் சறுக்கினது சாக்காம்!-சறுக்குக் கழிக்கிறதுக்கும், சறுக்கின திலேருந்து தப்பிக்கிறதுக்கும் கதையை ஒட்டுறே! நீ வெறும் நொண்டிக் குதிரை!” -

மிச்சம் மீதமிருந்த தேவரின் பற்கள் தொடுசு தொங்கல் வைக்காமல் கடிபட்டன.

"அப்பா, நீங்க பொய் பேசுறீங்க!” வீரமணி கிராப்புத் தலை குலுங்கத் தலையை உயர்த்தி, ரோசம் குலுங்கக் குரலையும் உயர்த்தி, ஆவேசம் தூள் பறக்கப் பேசினன். -