பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

121

13 1

'என்ன சொன்னே? என்னைப் பார்த்தாடா பொய் பேசுறவன்னு அபாண்டமாய்ப் பழி பாவம் சுமத்தினே?’’ -

கோடலி முடிச்சுப்போட்டிருந்த குடுமி அவிழ, கொடி கட்டிப் பறக்கும் கோபத்தோடு எழுந்தார் பெரும் நிலச்சுவான்தார் ஆதிமூலத் தேவர்.

உள்ளுக்குள்ளே சுழித்திட்ட குறும்புத்தனத் தோடு வெகு மிடுக்காக எதிர்த் திண்ணைத் தூணில் சாய்ந்து கொண்டு உட்கார்ந்திருந்தான் வீரமணி. நெஞ்சிலே வல்லமை பாத்தி கட்டிப் பாய்ந்தது; விழிகளில் வைரம் பசேலென்ற நெல்மணிக்கதிர்க் கொத்தாகப் பளிச்சிட்டது. பின்னே என்னவாம்? என்னைப் பார்த்து, வெள்ளெழுத்துக்காரன் கணக் கிலே நொண்டிக் குதிரைன்னு சொன்னல், அது பொய் இல்லீங்களா, அப்பா? நான் குதிரையும் இல்லே; நொண்டியும் இல்லே; நான் உங்களோட அருமைக் கொடுக்கு இல்லீங்களா? பெற்ற தகப்பன ரான உங்களோட ரோசத்திலே, பிறந்த பிள்ளை யான எனக்கு ஒண்ணுக்கு முக்காலே வீசமாச்சும் இருக்காதுங்களா? அம்மான் ராமையாத் தேவர் எனக்கு ஒண்ணும் கொம்பு இல்லே அந்தத் தகிடு தத்தக்கார ஆசாமியோட பொல்லாத்தனத்தைச் சுட்டி நீங்க ஏசினது மெத்த சரின்னு ஒப்புக் கொண்டுதான் நான் கம்முன்னு மெளனமாய் இருந்தேனேயொழிய, வேறே ஒண்ணும் கிடையா துங்க. ஆன, நீங்கதான் ஒரு காசுக்குக்கூடப் பெறுமதி இல்லாத ஒரு அற்பச் சங்கதிக்காக இம்மாம் நேரம் ஆடித் தீர்த்துப்புட்டீங்க!' என்று