பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122

‘122

வீரமணி நிதானமாகப் பேசி முடித்தான்.

இடைவெளி வாசலில் வந்து நின்ற பெரியவர் உணர்ச்சி கொப்புளிக்கப் பான்மையோடும் அழகாக வும் முறுவல் காட்டினர். மகனைப் பரிவும் பாசமும் சுரக்க, நெஞ்சோடு நெஞ்சாக அணைத்துக் கொண் டார். இமைகள் நனைந்தன. 'தம்பி, இப்பத்தான் எனக்கு நல்ல மூச்சு வருது. என்னமோ ஒரு. காரணத்தை உள்நோக்கமாய் வச்சுக்கிட்டுத்தான் நீ மெளனமாய் குந்தியிருந்தியோன்னு நினைச்சிட் டேன். * , அம்மானைத் திட்டினது உன் மனசுக்குச் சம்மதமில்லே என்கிறதைக் காண்பிக்கத்தான் நீ ஆப்படி மெளனப் பிள்ளையாரட்டம் உட்கார்ந்திருந் இயோன்னு கருதிட்டேன். உன் அம்மான் பேரிலே மயக்கம் கொண்டாடி, அதன் காரணமாகத்தான் நீ கோழையாக மாறி, அசட்டுத்தனமான மெளனத் தைக் காட்டி, உன் தப்பைப் பூசிமெழுக அகம் பாவத்தோடே அப்படி மெளனப் பிண்டமாய் நீ சமைஞ்சிட்டியோன்னு நான் எண்ணிக்கிட்டேன். ஆ,ை நான் தப்புக் கணக்குப் பேர்ட்டவன் அப்ப்டின்னு மட்டுக்கும் நீ அசந்து மறந்தாச்சும் நினைச்சியோ, அப்பாலே நான் உன்னைச் சும்மா விடவே மாட்டேன்! மாப்பும் கொடுக்க மாட் டேன். ஏன் தெரியுமா, மகனே?-நான் கணக்குப் போடுறதிலே அசகாய சூரப்புலியாக்கும்!" }

தேவரின் சிரிப்பையும் சுவீகரித்துக் கொண்டு வட்டியும் முதலுமாகச் சிரித்தான் தேவர் மைந்தன்: